மருத்துவச்செய்திகள் 

சிறுநீரை அடக்குபவர்களின் உடலுக்கு வரும் ஆபத்து

நாம் சிறுவயதில் ஓடி ஆடி விளையாடுகிறோம் சிறுவயதில் சிறுநீர் கழிக்க வேண்டுமானால் உடனடியாக செய்துவிடுகிறோம். வயதானால் நல்ல மலசலகூடம் அல்லது வேறு பல காரணங்களால் அடக்கிக் கொள்கிறோம். இவ்வாறு சிறுநீரை வெளியேற்றாமல் அடக்கி கொள்வதால் எதிர்காலத்தில் மூட்டு வலி நோய்க்கு எம்மை நாமே தயார்படுத்துகின்றோம் என்பதை மறவாதீர்கள். சிறுநீரகங்களில் சிறுநீரகம் நிரம்பி இருந்தாலும், நாம் சரியான இடத்திற்காக, நேரத்திற்காக அடக்கி வைக்கிறோம். இந்நிலை பெண்களுக்கு 10 வயது முதலும், ஆண்களுக்கு 18 வயது முதலும் ஆரம்பிக்கும். இந்நேரங்களில் நமது சிறுநீரகங்கள் சிறுநீரை வெளியேற்ற இயலாமல் தவிக்கிறது. அப்பொழுது மூளையிலிருந்து செல்லும் உத்தரவு மூலமாக தற்காலிகமாக சிறுநீரகம் தன் வேலையை நிறுத்தி வைக்கிறது. இதனால் நம் உடலில் ஓடும் இரத்தம், சிறுநீரை வெளியேற்றாமல் அப்படியே எல்லா இடங்களுக்கும் செல்கிறது. அவ்வாறு செல்லும் போது இரத்தத்தில் உள்ள யூரிக் ஆசிட்…

Read More
மருத்துவச்செய்திகள் 

கொப்புளங்களை குணப்படுத்தும் வீட்டு மருத்துவங்கள்

கோடை காலம் வந்துவிட்டால் நீரிழப்பு நோய்கள், தோல் தொடர்பான கொப்புளங்கள் வேனல் கட்டிகள் பலருக்கு ஏற்படும். இவ்வாறான தோல் தொடர்பான பிரச்சனைகள் வரும் போது வீட்டில் உள்ள மருத்துவ பொருட்களை வைத்தே அவற்றை குணப்படுத்தலாம். (1) சீரகத்தைப் பொடி செய்து சிறிது தேங்காயப் பாலில் கலந்து குழப்பி பூசினால் வேனல் கட்டிகள் உடைந்து விடும். (2) வாழைப்பூவைத் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துப் பூசலாம். (3) வெறும் வினிகரை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் விட்டுக் கலந்து பூசினால் வேனல் கட்டிகள், வேர்க்குரு, நாய்முள் எனப்படும் சூட்டுக் கொப்புளங்கள் நீங்கி வலியும் குறையும். (4) கொத்துமல்லி இலையை ஆமணக்கு எண்ணெயில் வதக்கிக் கட்டினால் வேனல் கட்டிகள் உடைந்து விடும். (5) பப்பாளி மரத்தைக் கீறினால் கிடைக்கும் பாலை இளநீர் அல்லது சந்தனத்தில் குழைத்து வேர்க்குரு, வேனல்கட்டி கரப்பான் மீது…

Read More
சினிமா செய்திகள் 

நோய்களைத் தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் கை கழுவுதல்!

வளர்ந்துவரும் நாடுகளில் தான் கைகளை முறையாகக் கழுவாமல், பல நோய்களுக்கு உட்பட்டு அவதியுறுவது அதிகம். ஆனால் இலங்கை, இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் வசிப்போர் கைகளாலேயே உணவை உண்ணும் பழக்கத்தினை உடையவர்கள். இந்தியாவில் மட்டும் ஆண்டிற்கு ஐந்து லட்சம் குழந்தைகள், கைகளை கழுவாமல் உணவை உட்கொள்ளவதால் உண்டாகும், வயிற்றுப்போக்கு நோயினால் பாதிக்கப்படுகின்றனர். உலக அளவில் 29 லட்சம் குழந்தைகள் இதே காரணத்திற்காக இறப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. இதனால் வளரும் நாடுகள் மற்றும் பின்தங்கிய நாடுகளில் கை கழுவுதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. அத்தோடு குழந்தைகள் மணலில் விளையாடும் போதும், மலம் கழித்துவிட்டு வரும்போதும், கை கால்களில் பாக்டீரியாக்கள் ஒட்டிக்கொள்கின்றன. இவ்வாறான செயற்பாடுகளின் பின்னர், சரியான முறையில் கை, கால்களை சுத்தம் செய்வதால் மட்டுமே பக்ட்டீரியாக்களை அழிக்க முடியும். பாடசாலை…

Read More
மருத்துவச்செய்திகள் 

வைரஸ் காய்ச்சலை போக்க அன்னாசி பூ மருந்து!

அன்னாசி பூவை பயன்படுத்தி காய்ச்சல், வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அன்னாசி பூ சீரகம் மிளகு தேன் செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர்விடவும். இதனுடன் வறுத்து பொடித்த அன்னாசி பூ பொடி அரை ஸ்பூன் அளவு சேர்க்கவும். இதனுடன் அரை ஸ்பூன் சீரகம், 10 மிளகு தட்டி சேர்க்கவும். இதை கொதிக்க வைத்து வடிகட்டி தேன் சேர்த்து காலை, மாலை குடித்துவர சளி, காய்ச்சல், இருமல் குணமாகும்.பல்வேறு நன்மைகளை கொண்ட அன்னாசி பூ நோய் எதிர்ப்பு சக்தி உடையது. நோய் நீக்கியாக விளங்குகிறது. நெஞ்சக சளி, இருமல், காய்ச்சல், உடல் வலிக்கு மருந்தாகிறது. பறவை காய்ச்சலை குணப்படுத்துகிறது.

Read More
மருத்துவச்செய்திகள் 

நோயெதிர்ப்பு சக்தியைத் தரும் சோளம்!

இந்தியாவைப் பொறுத்தவரை அரிசி, கோதுமைக்கு அடுத்தபடியாக அதிகமாக சாகுபடி செய்யப்படும் தானியம் சோளம் தான்.  வட மாநிலங்களில் சோள ரொட்டி மிகவும் பிரபலமான உணவும் கூட. சோளம் அனைவராலும் விரும்பி சப்பிடப்படுவதுடன், இலகுவில் செமிபாடடையக் கூடியது. 100 கிராம் சோளத்தில் 70.1 கிராம் மாச்சத்து, 127 மி.கி. புரதச்சத்து, 3.1 மி.கி. கொழுப்பு உள்ளது. பாஸ்பரஸ் 222 மி.கி., கால்சியம் 25 மி.கி. இரும்புச்சத்து 4 மி.கி. மற்றும் பொட்டாசியம் போன்ற தாது சத்துக்களும் உள்ளன. பொட்டாசியம் தசைகள் நன்கு சுருங்கி விரிய உதவுகின்றது. இரத்த ஓட்டத்தையும் சீர் செய்யும். பாஸ்பரஸ், கால்சியம் போன்ற தாதுக்கள் எலும்புக்கு உறுதியளிக்கும். சோளத்தில் பி. காம்பஸ் விட்டமின் சத்துக்களும், உடலுக்கு ஊட்டமளிக்கக்கூடிய தாவர ஊட்டசத்துக்களும் அடங்கியுள்ளன. சோளம், ஆன்டிஆக்ஸிடண்ட் நிறைந்த உணவுமாகும். அதன் மேல் தோலில் மெழுகு போன்ற பொருள்…

Read More
மருத்துவச்செய்திகள் 

அஜீரணக் கோளாற்றைப் போக்குவது எப்படி?

பொதுவாக அனைவருக்குமே இருக்கின்ற ஒரு பிரச்னை தான் அஜீரணக் கோளாறு. இது எப்போது வரும் என்றே தெரியாது. வந்தால் சீர் செய்வதற்குள் போதும் என்று ஆகிவிடும். இலகுவான சில வழிமுறைகளை கையாண்டு அஜீரணக் கோளாறில் இருந்து தப்பிப்பது சுலபமானது. அஜீரண கோளாற்றை இல்லாமலாக்க இதோ சில வழிமுறைகள் >> ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். >> அல்லது கறிவேப்பிலை, சுக்கு, சீரகம், ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டாலும் அஜுரணம் சரியாகும். >> அஜுரணக் கோளாறு சரியாக வெற்றிலை, நான்கு மிளகு இவற்றை மென்று தின்றாலும் போதுமாகும். >> ஒமம், கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினாலும் அஜுரணம் சீராகிவிடும். >> ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும்…

Read More
மருத்துவச்செய்திகள் 

மாரடைப்பைத் தடுக்கும் சக்தி ‘இஞ்சி’க்கு உண்டு!

இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக் கொள்ளவேண்டும். கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி சாப்பிடுவது இரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்கச் செய்துவிடும். இரத்த நாளங்களில் இரத்தக்கட்டு ஏதேனும் ஏற்படுமாயின் அதை சரிசெய்வது அவ்வளவு எளிதன்று. இதற்குக் கைகண்ட மருந்தாக இஞ்சி விளங்குகின்றது. இரத்தநாளங் களின் செயல்பாட்டை மேம்படுத்தி மாரடைப்பு நேராமல் இஞ்சி தடுக்கின்றது. ஆரோக்கியமான 30 நபர்களிடம் இஞ்சியின் மருத்துவ குணத்தைக் குறித்து அறிய சோதனை நடத்தப்பட்டது.முதல் வாரத்தில் 50 கிராம் வெண்ணையும், 4 ரொட்டித்துண்டுகளும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. அடுத்தவாரம் அதனுடன் ஐந்து கிராம் இஞ்சி சேர்த்து கொடுக்கப்பட்டது. அதற்கு அடுத்த வாரம் அவர்களின் இரத்தம் சோதிக்கப்பட்டது. அவர்களின் இரத்த நாளத்தின்…

Read More
மருத்துவச்செய்திகள் 

வெண்டைக்காயின் மூலம் சர்க்கரை நோயாளர்களுக்கு தீர்வு!

மூன்று முதல் ஐந்து  வரை எண்ணிக்கையிலான பசுமையான ‘வெண்டைக்காய்களைத் தேர்ந்து எடுத்து, அவற்றை நன்றாக நீரிட்டுக் கழுவி எடுத்துக் கொண்டு அதன் மெல்லிய முனைப் பகுதியில் சிறிதளவும், அதன் அடிப்பகுதியில் சிறிதளம் துண்டித்துவிட்டு வெண்டைக்காய் ஒவ்வொன்றையும் நீளவாக்கில் இரு துண்டாக வெட்டி ஒரு பாத்திரத்தில் இட்டு, 500மி.லிட்டர் நீர் விட்டு அடுப்பேற்றி சிறு தீயில் கொதிக்கவிட்டு, 3-ல் 2 பங்கு நீர் வற்றியதும் இறக்கி வைத்து, ஒரு பாத்திரத்தில் மூடி, இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் எழுந்து வெறும் வயிற்றில் நீரை மட்டும் தெரிவிறுத்திக் குடித்து விடவும். இப்படி அன்றாடம் குடித்து வரும் போது சர்க்கரை நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு நாளடைவில் குறைந்து விடும். இம்முறை புற்று நோய் உள்ளவர்ககளுக்குக் கூட ஒரு துணை மருந்தாக உதவும். இதய நோய் உள்ளவர்கள், மாரடைப்பு…

Read More
மருத்துவச்செய்திகள் 

வெற்றிலையில் மறைந்திருக்கும் மருத்துவக் குணங்கள்

>> வெற்றிலையை நீரிலிட்டுக் கொதிக்க வைப்பதால், ஒரு விதமான நறுமணமுடைய எண்ணெய் கிடைக்கும். இந்த எண்ணெயை சேமித்து வைத்து உபயோகப்படுத்துவதால், விட்டு விட்டு முறையாக வலிக்கின்ற கடும் வயிற்று வலி குணமாகும். இந்த எண்ணெயை மேல் பூச்சாகப் பூசுவதால் புண்கள் சீழ்பிடிக்காமல் சீக்கிரத்தில் ஆறிவிடும். உள்ளுக்கு சில துளிகள் சாப்பிடுவதால் சுவாச நாளங்களைப் பற்றிய சளி, இருமல், மூக்கொழுக்கு ஆகிய நோய்கள் குணமாகும். >> வெற்றிலைச் சாறு ஒரு பங்கும் தண்ணீர் இரண்டு பங்கும் சேர்த்து அன்றாடம் பருகிவர நன்கு சிறுநீரை வெளியேற்றும். வெற்றிலையை நசுக்கி வலியுள்ள முகப்பருக்கள் மீதும் வீக்கமுற்று வலிக்கின்ற போதும் மேல் பற்றாகப் போட விரைவில் வீக்கமும் வலியும் குறைந்து நலம் உண்டாகும். காது வலி கண்ட போது வெற்றிலைச் சாறு இரண்டு அல்லது மூன்று துளிகள் காதினுள் விடுவதால் காது குத்தல்,…

Read More
மருத்துவச்செய்திகள் 

மருந்தால் குணமாகாத சளி இந்த பானத்தால் குணமாகும்…!!

பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்து எந்த மருந்துக்களை உபயோகித்தாலும் குணமாகாது. மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி, அதனில் தேவையான அளவு உப்பு இட்டு, நன்கு கொதிக்க வையுங்கள். கொதிக்க வைத்த இரண்டு கப் நீர், ஒரு கப் அளவு குறையும் வரை கொதிக்க விடுங்கள். பிறகு அந்த எலுமிச்சை பழத்தையும் பிழிந்து அந்த நீரை ஒரு கப்பில் எடுத்து சிறிதளவு சீனி சேர்த்துக் கொள்ளுங்கள். ஓரளவு சூட்டுடன் இரவு தூங்க செல்லும் அரை மணி நேரத்துக்கு முன்பு குடித்து விட்டு தூங்குங்கள். நீங்கள் உறங்கிய பிறகு, உங்களுக்கு வியர்வையாக வியர்த்து உங்கள் உடம்பில் உள்ள சளி வெளியேறி விடும். பிறகு மருத்துவர்களிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

Read More