ராஜநாகத்தின் தலையில் இருக்கும் நாகமணியின் இரகசியம்! | Tamilibc.Com
எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய தமிழ் ஐ.பி.சி செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow IBC" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On:Monday, December 19, 2016

ராஜநாகத்தின் தலையில் இருக்கும் நாகமணியின் இரகசியம்!

ஸ்வாதி நட்சத்திரத்தன்று பெய்யும் மழையின் முதல் துளிகள் ராஜ நாகத்தின் வாயில் விழும் போது முத்து உருவெடுப்பதாக கூறப்படுகின்றது.
நூறாண்டுகள் வாழ்ந்த ராஜநாகத்தின் உடலில் மட்டுமே இந்த முத்து உருவெடுக்கும். இந்த முத்தை அடைந்த நாகம் தான் விரும்பிய உருவை எடுக்கமுடியும்.
அளவில் பெரிதாக, நீல நிறத்தில் ஒளிரும் இந்த முத்தை நாகம் தன் வாயில் ஒதுக்கி வைத்திருக்கும்.
இருளில் அதன் வெளிச்சத்தைக் கொண்டு இரை தேடவும், விளையாடவும் வெளியே உமிழும். இந்த முத்தைப் பிரிந்தால் நாகம் இறந்து விடும்.
இந்த முத்தை அடைந்தவர் வாழ்வில் செல்வம் மிகுந்து விரும்பியதை எல்லாம் அடைவர்.எதிர்மறையான ஆளுமையை இந்த முத்து முறியடிக்கும் என நம்புகின்றனர்.
ராஜநாகத்தின், தலை, நாகமணி,ரகசியம், Nagamani, Ragasiyam

நாக தோஷம் உள்ளவர்களுக்கான வழிபாடுகளும், பரிகாரங்களும்!
நாக தோஷம் இருப்பவர்களுக்கு, அற்ப ஆயுள், வம்ச நாசம், தீராத வியாதி, தரித்திரம், நோய் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புண்டு. இதற்கான வழிபாடுகளும் பரிகாரங்களும் உள்ளன.
செல்வ செழிப்புக்கு - தங்கம் நிரம்பிய குடம் அல்லது தெய்வீகம் நிறைந்த பொருட்களுடன் கும்பம் வைத்து வழிபட வேண்டும்.
கல்வி மற்றும் சுபிட்ச வாழ்வு பெறுவதற்கு - பட்டு சார்த்துதல், தானியம் மற்றும் திவ்ய ஆபரணங்கள் வழங்க வேண்டும்.
உடல் நலம் பெற - உப்பு காணிக்கை செலுத்த வேண்டும்.
விஷத்தன்மை நீங்கிட - மஞ்சள் காணிக்கை செலுத்தலாம்.
ஆரோக்கிய வாழ்வுபெற - நல்ல மிளகு, கடுகு, சிறு பயிறு போன்றவற்றை நைவேத்தியமாக செலுத்தலாம்.
சர்ப்ப தோஷ பரிகாரத்திற்கு - தங்கத்தில் செய்யப்பட்ட புற்று, நாகத்தின் முட்டை, மரம், பூமி போன்ற வடிவங்கள் வாங்கி சமர்ப்பிக்கலாம்.
நீண்ட ஆயுள் பெற - நெய் காணிக்கை செலுத்த வேண்டும்.
நினைத்த காரியம் கை கூடுவதற்கு - பால், கதலிப்பழம், நிலவறை பாயாசம் நைவேத்தியம் படைக்க வேண்டும்.
குழந்தை பாக்கியத்திற்கு - மஞ்சள் பொடி, பால் நைவேத்தியம் படைக்க வேண்டும்.
மரங்களின் செழிப்புக்கு - மரங்களில் இருந்து கிடைக்கும் காய்கள், கிழங்குகள் சமர்ப்பிக்க வேண்டும்.
நாக தோஷ பரிகாரத்திற்கு - மஞ்சள் பொடி காணிக்கை, பால்- பழம், பால் பாயாசம், அப்பம், இளநீர், பூக்கள், அவல் நைவேத்தியம்.

இன்றையை விளம்பரம்

பிரபலமான செய்திகள்

Loading...

Sign Up to TamilIBC Newsletter

© 2012 Tamilibc All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149