திருமண செய்து கொள்வதாக கூறி நர்சை காதலித்து ஏமாற்றிய மாணவர் | Tamilibc.Com
எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய தமிழ் ஐ.பி.சி செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow IBC" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On:Friday, January 6, 2017

திருமண செய்து கொள்வதாக கூறி நர்சை காதலித்து ஏமாற்றிய மாணவர்

தமிழகத்தில் திருமண செய்து கொள்வதாக கூறி, காதலித்து நர்சை ஏமாற்றிய மாணவனின் செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரியதஷனி (27). இவர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் செவியலராக பணியாற்றி வருகிறார்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(22), இவர் தனியார் கல்லூரிய படித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளைடவில் காதலாக மாறியுள்ளது.
மணிகண்டன், பிரியதர்ஷனியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை அவருடன் உறவு வைத்துள்ளார். இதன் விளைவாக அவர் கர்ப்பம் அடைந்துள்ளார்.

இதனால் பதற்றமடைந்த அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மணிகண்டனை வற்புறுத்தியுள்ளார். ஆனால் மணிகண்டனோ அவரிட ஆசை வார்த்தைகள் கூறி அவருடைய கருவை கலைத்துள்ளார்.
ஆனால், மணிகண்டன் திருமணம் செய்யாமல் ஏமாற்றியதுடன், மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மணிகண்டன் மீது பிரியதர்ஷினி அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
புகாரை அடுத்து மணிகண்டன் மீது பாலியல் வன்கொடுமை , ஏமாற்றுதல், கருகலைப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த பொலிசார் அவரை சிறையில் அடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்றையை விளம்பரம்

பிரபலமான செய்திகள்

Loading...

Sign Up to TamilIBC Newsletter

© 2012 Tamilibc All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149