யாழில் இளைஞர் மீது துரத்தி துரத்தி வாள்வெட்டு | Tamilibc.Com
எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய தமிழ் ஐ.பி.சி செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow IBC" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On:Tuesday, January 10, 2017

யாழில் இளைஞர் மீது துரத்தி துரத்தி வாள்வெட்டு

கல்வியங்காடு பகுதியில் இளைஞர் மீது உந்துருளியில் வந்த குழுவினர், வாள்வெட்டை மேற்கொண்டு விட்டுத் தப்பி சென்றுள்ளனர்.
 
கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள புலவனார் வீதியிலேயே இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
 
குறித்த இளைஞர், நேற்றிரவு அவ்வீதியால் சென்று கொண்டிருந்த வேளை, மூன்று உந்துருளியில் வந்த அறுவர் அடங்கிய குழு, இளைஞரை வழி மறித்துத் தாக்கியுள்ளனர்.

 
தாக்குதலாளிகளிடமிருந்து தப்பித்த இளைஞர், விளையாட்டரங்கு வீதி வழியாக தப்பியோடிவேளை, தாக்குதலாளிகள் குறித்த இளைஞனைத் துரத்தி துரத்தி வாளினால் வெட்டியுள்ளனர்.
 
வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞர், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்றையை விளம்பரம்

பிரபலமான செய்திகள்

Loading...

Sign Up to TamilIBC Newsletter

© 2012 Tamilibc All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149