ஒரு நிமிடத்தில் அதிக ஆடை மாற்றிய பெண்ணின் உலகசாதனை - அதிர்ச்சி வீடியோ | Tamilibc.Com
எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய தமிழ் ஐ.பி.சி செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow IBC" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Loading...
Published On:Saturday, January 7, 2017

ஒரு நிமிடத்தில் அதிக ஆடை மாற்றிய பெண்ணின் உலகசாதனை - அதிர்ச்சி வீடியோ

மலேசியா நாட்டைச் சேர்ந்த மயாஜாலம் காட்டும் பெண்கள் புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.
ஒரே நிமிடத்தில் அதிரடியாக 18 உடைகளை மாற்றி சாதனை படைத்துள்ளனர். 
சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் உள்ள பொழுதுப்போக்குப் பூங்காவில் இந்த சாதனை நிகழ்ந்தப்பட்டுள்ளது.
சீனாவில் ஒருவாரகால தேசிய விடுமுறை விரைவில் வரவுள்ள நிலையில், மக்களை மகிழ்விக்க பொழுதுப்போக்கு பூங்காக்கள் போட்டிப்போட்டு கொண்டு புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகின்றன.

அவ்வகையில், ஹுபேய் மாகாண தலைநகரான உஹான் நகரில் உள்ள ஹேப்பி வேல்லி பொழுதுப்போக்குப் பூங்காவில் ஒரு புதிய சிறப்பம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சில் பங்கேற்ற மலேசியா நாட்டைச் சேர்ந்த இரு மயாஜால பெண் கலைஞர்கள் ஒரே நிமிடத்தில் 18 உடைகளை மாற்றி புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

மேடையின் தோன்றும்போது அணிந்திருந்த கருப்புநிற உடையுடன் சேர்த்து மொத்தம் 19 உடைகளில் ஒரு பெண் தோன்ற, மற்றொரு பெண் ஒரு உறைபோன்ற திரையால் மறைத்தபடி, அடுத்தடுத்து உடைகளை மாற்றுவதில் அவருக்கு உதவி செய்கிறார்.

மலேசியாவை சேர்ந்த அவேரி சின் மற்றும் சில்வியா லிம் ஆகியோர் ஒரே நிமிடத்துக்குள் நடத்திகாட்டிய இந்த சாகச நிகழ்ச்சியின் மூலம் முன்னயை உலக சாதனை முறியடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



இன்றையை விளம்பரம்

பிரபலமான செய்திகள்

விளம்பரம் செய்ய...

Sign Up to TamilIBC Newsletter

© 2012 Tamilibc All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149