ஐரோப்பிய ஆடைகளுக்கு சிறிலங்காவில் தடை! | Tamilibc.Com
எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய தமிழ் ஐ.பி.சி செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow IBC" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On:Tuesday, January 10, 2017

ஐரோப்பிய ஆடைகளுக்கு சிறிலங்காவில் தடை!

அரச உயர் அதிகாரிகளுக்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ள ஐரோப்பிய உடை தொடர்பான சுற்றறிக்கையை இரத்துச்செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
 
பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.
 
அதனடிப்படையில் , எதிர்காலத்தில் அத்தியாவசிய சந்தர்ப்பங்களை தவிர மற்றைய சந்தர்ப்பங்களில் 'டை' மற்றும் 'கோட்' அணிவது கட்டாயம் இல்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.குறிப்பிடத்தக்கது

 
இதன்போது ஐரோப்பிய ஆடைகளுக்கு தடை விதிப்பதற்கான காரணத்தையும் ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.
 
கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் திகதி நான் பொலன்னறுவைக்கு வருடாந்த மதவழிப்பாட்டிற்காக சென்றிருந்தேன். நான் செல்லும் போது கிட்டத்தட்ட இரவு 11 மணியாகும். இதன் போது எங்கள் பிரதேச செயலாளர் டை என்பவற்றை அணிந்து வந்திருந்தார். 
 
இரவு நேரத்தில் எதற்கு டை எல்லாம் அணிந்து வந்தீர்கள் என வினவினேன். அந்த கலாச்சார சுற்றறிக்கை தாக்கமாக இருக்கும் என நான் நினைத்துக் கொண்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
 
அரசாங்க சேவையின் உயர் அதிகாரிகள் ஐரோப்பிய ஆடை அணிய வேண்டும் என சில அரச தலைவர்கள் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளனர். அரசாங்க சேவைகளில் ஈடுபடும் உயர் அதிகாரிகளும் அவசியமான நேரத்தை தவிர ஏனைய நேரங்களில் இவ்வாறு உடை அணிவது அவசியமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

இன்றையை விளம்பரம்

பிரபலமான செய்திகள்

Loading...

Sign Up to TamilIBC Newsletter

© 2012 Tamilibc All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149