பிரசவத்திற்கு பின் இல்லறத்தில் ஈடுபடாமல் தவிக்கும் பெண்கள், என்ன காரணம்? | Tamilibc.Com
எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய தமிழ் ஐ.பி.சி செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow IBC" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On:Tuesday, January 3, 2017

பிரசவத்திற்கு பின் இல்லறத்தில் ஈடுபடாமல் தவிக்கும் பெண்கள், என்ன காரணம்?

ஒரு பெண்ணின் திருமணத்திற்கு பிறகு சந்திக்கும் முக்கியமான ஒன்று தான் பிரசவ வலி. ஒன்பது மாதம் தன்னுடைய வயிற்றில் குழந்தையை சுமந்து, பிறகு அது வெளிவரும் பொழுது அவள் படக்கூடிய கஷ்டம் வர்ணிக்க முடியாததாகும்.
பிரசவத்திற்கு பிறகு பெண்களின் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. குழந்தை பிறகும் பொழுது உடலில் ஏற்பட்ட காயங்கள், அதனால் ஏற்படும் மனரீதியான மாற்றங்கள் போன்றவை, பிரசவத்திற்கு பின்பு அவர்களால் சுறுசுறுப்பாக இயங்க முடியாது.
இதுபோன்ற நேரங்களில் பெண்கள் தங்களின் துணையுடன் உடலுறவில் ஈடுபட விருப்பம் இருந்தாலும், உடல் ரீதியாக அவர்களால் இயங்க முடியாது. உடலில் உள்ள வலிகள் தான் அவர்களை செக்ஸ் உறவில் இருந்து தடுக்கும்.
குழந்தை பிறந்த பின் பெண்கள் பல முறை உடலுறவில் ஈடுபடுவதில் பிரச்சனையை சந்திப்பார்கள். இதற்கு பிரசவத்தினால் உடலில் ஏற்பட்ட காயங்களின் வலி இருப்பது தான் காரணமாகும். அதிலும் சிசேரியன் செய்திருந்தால், நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்.
பிரசவத்திற்கு பின் பெண்களின் மார்பகங்கள் மிகவும் சென்சிடிவ்வாக இருக்கும் மற்றும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால், மார்பகங்களில் இருந்து பால் வடியும். இதன் காரணமாக முன் விளையாட்டுக்களில் ஈடுபட்டால், கடுமையான வலியை உணரக்கூடும்.
பிரசவத்திற்குப்பின், பெண்கள் உறவில் ஈடுபடுவதில் சிரமத்தை அனுபவிக்க காரணம், பிரசவத்தினால் யோனியில் சுவர்கள் விரிவடையும். யோனி சுவர்கள் இறுக்கமாக இருந்தால் தான், உறவில் இன்பத்தைக் காண முடியும்.
பிரசவத்திற்கு பின்னான உடல் பருமன், ஸ்ட்ரெட்ச் மார்க்குகள், தளர்ந்த சருமம், தழும்புகள் போன்றவை, அவர்களது அழகைக் கெடுப்பது போன்று இருக்கும். பெண்களும் அதையே உணர்வார்கள்.
இப்படி மனதில் தங்கள் அழகு குறைந்துள்ளதை நினைத்து பெண்கள் புலம்புவதாலும், உறவில் ஈடுபடுவதில் அதிக ஆர்வம் இருக்காது என்று கூறப்படுகின்றது.
பிரசவத்திற்குப்பின், குழந்தையைக் கவனித்துக் கொள்வதிலேயே பெண்கள் அதிக நேரம் செலவிடுவார்கள். இதனால், எப்படி உடலுறவில் ஈடுபட நேரம் இருக்கும்.

இன்றையை விளம்பரம்

பிரபலமான செய்திகள்

Loading...

Sign Up to TamilIBC Newsletter

© 2012 Tamilibc All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149