வினோதம்

அறுவை சிகிச்சை மூலம் தங்களை பெண்ணாக மாற்றிக் கொண்ட 7 ஆண் பிரபலங்கள்!

ஆணாக பிறந்திருந்தளும் கூட, அவனுள் பெண்மைக்கான சில குணாதிசயங்கள் இயற்கையாகவே இருக்கும். பெண்ணாகவே பிறந்திருந்தாலும் அவளுக்குள் ஆணுக்கான சில குணாதிசயங்கள் இயற்கையாகவே இருக்கும்.ஏறத்தாழ 70:30 என்ற அளவில் நமது உடல் இப்படி இருபாலின கலப்பு கொண்டு தான் இருக்கிறது. இந்த சதவிதத்தில் மாற்றங்கள் ஏற்படும் போது தான். அவர்கள் மூன்றாம் பாலினமாக அல்லது தங்களை எதிர் பாலினமாக மாற்றிக் கொள்ள விரும்புகிறார்கள்.

இந்த வகையில் பிரபலமாக, மாடல்களாக இருந்து, பிறகு தங்களுக்குள் உண்டான உணர்வு ரீதியான மாற்றங்களை கண்டு, அறுவை சிகிச்சை மூலம் தங்களை முழு பெண்ணாக மாற்றிக் கொண்ட ஆண்களை பற்றி தான் இங்கே காணவுள்ளோம்…

கிம் பெட்ராஸ்

கிம் பெட்ராஸ்

கிம் பெட்ராஸ் ஒரு ஜெர்மன் பாப் பாடகி. இவரே தனது பாடல்களை சுயமாக எழுதி, இசை அமைத்து பாடும் திறமை கொண்டவர். இவர் பிறப்பால் ஆண். தன்னுள் பெண்மையை உணர்ந்த கிம் பெட்ராஸ் இளம் வயதிலேயே தன்னை அறுவை சிகிச்சை மூலமாக பெண்ணாக மாற்றிக் கொண்டார்.

நிக்கி சாவ்லா

நிக்கி சாவ்லா

நிக்கி சாவ்லா இந்தியாவின் எம்.டிவி வெப் சீரியஸில் தோன்றிய மாடல் ஆவார். முதல் சீசன் முடியும் வரை நிக்கி சாவ்லா பற்றி நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கே தெரியாது.

பிறகு இவர் யுடிவி நிகழச்சி ஒன்றில் தோன்றி பேசும் போது தான் தெரிந்தது. பிறகு ரசிகர்கள் பலர் இவரை எதிர்த்து, தங்கள் வெறுப்பை காட்டி கடிதங்கள் பல அனுப்பினார்கள். ஆனால், இவற்றை எல்லாம் இவர் பெரிதுப்படுத்திக் கொள்ளவில்லை.

நான் ஒரு ஆணாக இருந்தவர் என்பதை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நான் டி.ஆர்.பி-காக பொய் கூறுகிறேன் என கருதினார்கள் என நிக்கி சாவ்லா ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

ஆண்ட்ரேஜா பீஜிக்

ஆண்ட்ரேஜா பீஜிக்

ஆண்ட்ரேஜா பீஜிக் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மாடல். இவர் 2013ன் வருட கடைசியில் தன்னை முற்றிலுமாக பெண்ணாக மாற்றிக் கொண்டார். உலகின் இருபால் கொண்ட முதல் சூப்பர் மாடல் என்ற பெருமை பெற்றார் ஆண்ட்ரேஜா பீஜிக்.

பெண்ணாக மாற்றிக் கொண்ட பிறகு, தனது சருமம் குறித்து மிகவும் பெருமைக் கொண்டதாக ஆண்ட்ரேஜா பீஜிக் கூறினார். ஆணாக இருந்ததை காட்டிலும், இப்போது பெண்ணாக மாறிய பிறகு இவரது வேலை மிக சிறப்பான முறையில் முன்னேற்ற பாதை கண்டுள்ளது.

ஷினதா சங்கா!

ஷினதா சங்கா!

இவர் ஒரு பஞ்சாப் குடும்பத்தை சேர்ந்தவர். தனது முடிவை வீட்டில் கூறி ஒப்புதல் வாங்குவது என்பது இவருக்கு மிக பெரும் சிரமமாக அமைந்தது. இவர் இப்போது பிரட்டனில் வசித்து வருகிறார். அங்கே தெற்காசிய மாடல்கள் மத்தியில் இவர் முதன்மை இடத்திலும், மிக பிரபலமான மாடலாகவும் திகழ்ந்து வருகிறார்.

லீ டி!

லீ டி!

ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் மாற்று பாலினம் கொண்ட நபர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார் லீ டி. இவர் மிக பிரபலமான பிரேஸில் கால் பந்தாட்ட வீரர் டோனின்ஹோ செர்ஜோவின் மகள் ஆவார். இவர் ஃபோர்ப்ஸ் இதழில் இத்தாலியில் ஃபேஷனை மாற்றியமைத்த 12 பெண்களில் ஒருவராக தேர்வாகியுள்ளார்.

கௌரி அரோரா!

கௌரி அரோரா!

ஸ்போர்ட்ஸ்வில்லா போட்டியாளராக இருந்தவர் கௌரவ் அரோரா. ஆனால், அதன் பிறகு இவர் தன்னை ஒரு பெண்ணாக மாற்றிக் கொண்டார். ஆரம்பத்தில் இவர்களது பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும். அரோராவின் உணர்வுகளை புரிந்து சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டனர்.

தன்னை முற்றிலுமாக பெண்ணாக மாற்றிக் கொண்ட அரோரா பெயரை கெளரி என மாற்றிக் கொண்டார். இவர் இந்தியாவின் அடுத்த டாப் மாடல் என்ற போட்டியில் பங்கெடுத்துக் கொண்டார்.

இவரை சிலர் விமர்சனம் செய்தாலும், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மேலும், சமீபத்தில் ஒரு பெட்டியில். ஆணாக இருந்து பெண்ணாக மாறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதன் பின்னணியில் அறுவை சிகிச்சையில் இருக்கும் வலி குறித்து யாருக்கும் தெரியாது என கூறி இருந்தார்.

பாபி டார்லிங்

பாபி டார்லிங்

பாபி டார்லிங் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இவர் 18 கே-மேன் பாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் தனது 23 வயதிலேயே தன்னை பெண்ணாக மாற்றிக் கொண்டார். இவர் திருமணம் செய்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.