வினோதம்

தங்களுக்கு பிடித்த நடிகர் / நடிகை போல பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கண்ட ரசிகர்கள்!

தனக்கு விருப்பமான நடிகருக்காக கட்-அவுட், பாலாபிஷேகம், மாலை, அதிகாலை ஷோ, அன்னதானம் செய்பவர்களையே நீங்கள் ரசிகர்கள் அல்ல வெறியர்கள் என்றால். தங்களுக்கு விருப்பமான நடிகருக்காக, அவர்களை போன்றே தனது உடல், முக தோற்றத்தையே பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொண்ட ரசிகர்களை என்னவென்று கூறுவீர்கள்?


இப்படியுமா சில ஜீவன்கள் இருக்கின்றன என நீங்கள் கேள்வி எழுப்புகிறீர்களா? இருக்கிறார்கள், இங்கல்ல அயல்நாட்டில். பிளாஸ்டிக் சர்ஜரி என்பது ஏதோ பல் மருத்துவரிடம் சென்று பல் பிடிங்கி வருவது போலாகிவிட்டது மேற்கத்திய நாடுகளில்.

கண், மூக்கு, காதுகளில் இருந்து அந்தரங்க உறுப்பு வரை அழகுப்படுத்திக்கொள்ள தனிதனி ஸ்பெஷலிஸ்ட் பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர்கள் இருக்கிறார்கள்.

இவ்வளவு, நம் நாட்டிலேயே மும்பையில் பெண்ணுறுப்பை மட்டும் அழகுப்படுத்திக் கொள்ள தனி சிறப்பு மருத்துவமனை இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்….

ஜெஸிகா ராபிட்!

ஜெஸிகா ராபிட்!

25 வயது நிரம்பிய பிக்ஸி ஃபாக்ஸ் என்ற நபர் $1,20,000 செலவு செய்து ஜெஸிகா ராபிட் போன்ற தோற்றம் பெற்றார். இவர் இதற்காக தனது ஆறு விலா எலும்புகளை அகற்றி கொண்டார். கார்டூனில் இருக்கும் அதே தோற்றத்தை பெற இந்த விபரீத முயற்சியை மேற்கொண்டார் இவர். ஃபாக்ஸ்” நான் சிறந்த கார்டூன் பாத்திரம் போன்ற தோற்றம் பெற இவ்வாறு செய்கிறேன். இதை விரும்பியே செய்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

Image Source: Wikimedia

ஜஸ்டின் பைபர்!

ஜஸ்டின் பைபர்!

டாபி ஷெல்டன் எனும் நபர் ஒரு லட்சம் டாலர்கள் செலவு செய்து பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் ஜஸ்டின் பைபர் போன்ற முக தோற்றம் பெற்றுள்ளார். ஷெல்டனின் வயது வெறும் 14 தான்.

ஷெல்டன் ஆகஸ்ட் 18, 2015ல் காணாமல் போனார். அவரை போலீஸ் தேடிய போது ஆகஸ்ட் 21, 2015ல் சான் பெர்ணான்டோ பள்ளத்தாக்கில் பிணமாக கிடந்தார். பிறகு, இவரது அறைகளில் போதை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. ஏதோ, காதல் முறிவின் காரணமாக இவர் தற்கொலை செய்துக் கொண்டார் என விசாரணை முடிவில் தெரிவிக்கப்பட்டது.

Image Source: Wikimedia

தி ஹல்க்!

தி ஹல்க்!

ரொமெரி டோஸ் சாண்டோஸ் அல்வ்ஸ் ஹல்க் போன்ற உடல் அமைப்பு பெற வேண்டும் என விரும்பினார். இவர் பிரேசில் நாட்டை சேர்ந்தவர். தனது உடல் அமைப்பை பெரிதாக்கி கொள்ள இவர் நிறைய இன்ஜெக்ஷன்கள் எடுத்துக் கொண்டார். இதனால் இவர் பெரிய உடல் அமைப்பு பெறும் அதே சமயம், இதன் பக்கவிளைவுகளால் உயிரிழப்பு ஏற்படும் என்பதும் அறிந்திருந்தார்.

Image Source: Twitter

கிம் கர்தாஷியன்

கிம் கர்தாஷியன்

23 வயதுமிக்க ஜோர்டான் ஜேம்ஸ் பார்க் எனும் நபர் கிம் கர்தாஷியன் போல தோற்றமளிக்க வேண்டும் என விரும்பி ஒன்றைரை இலட்சம் டாலர்கள் செலவு செய்தார். இதன் மூலம் செயற்கை முறையில் தனது தோற்றத்தை மாற்றிக் கொண்டார்.

Image Source: Reddit

ஜெனிபர் லாரன்ஸ்

ஜெனிபர் லாரன்ஸ்

ஜெனிபர் லாரன்ஸிற்கு இரசிகர் பட்டாளம் ஏராளம். 2014ல் இவரது ரசிகை ஒருவர் இவரை போலவே தோற்றம் பெற வேண்டும் என 25 ஆயிரம் டாலர்கள் செலவு செய்து தனது முகத்தை இவரை போலவே மாற்றிக் கொண்டார்.

Image Source: Wikimedia

பிரிட்னி ஸ்பியர்ஸ்!

பிரிட்னி ஸ்பியர்ஸ்!

மூக்கு மற்றும் மார்பகங்களை கிறிஸ்டல் யு என்ற 24 வயது பெண்மணி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மாற்றிக் கொண்டார். இவர் அலுவலக வேலை செய்து வந்த பெண்மணி ஆவார்.

Image Source: Wikimedia

மைக்கல் ஜாக்ஸன்!

மைக்கல் ஜாக்ஸன்!

பிரிட்டிஷ் சேர்ந்த மிக்கி ஜே எனும் பெண்மணி எட்டாயிரம் பவுண்டுகள் செலவு செய்து மைக்கல் ஜாக்ஸன் போன்ற தாடை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். மேலும், இரண்டு மூக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையும் செய்துக் கொண்டார்.

ஏஞ்சலினா ஜூலி!
ஏஞ்சலினா ஜூலி!

நதியா சுல்மேன் எனும் இந்த பெண், ஆயிரக்கணக்கான டாலர்கள் செலவழித்து ஏஞ்சலினா ஜூலி போன்ற தோற்றம் பெற முயன்றுள்ளார். ஆயினும், அவரை போன்ற தோற்றம் பெற இயலவில்லை.

Image Source: Twitter

கேட் வின்ஸ்லெட்

கேட் வின்ஸ்லெட்

41 வயதுமிக்க டெபோரா டேவன்போர்ட்எனும் இந்த பெண்மணி பதினைந்தாயிரம் டாலர்கள் செலவு செய்து பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தனது முகத்தை கேட் வின்ஸ்லெட் போல தனது முகத்தை மாற்றிக் கொண்டார்.

Image Source: Pinterest

லேடி காகா!

லேடி காகா!

டோனா மேரி ட்ரேகோ எனும் இந்த பெண்மணி லேடி காகாவின் தீவிர ரசிகை. இவர் அறுபதாயிரம் யூரோக்கள் செலவு செய்து பிளாஸ்டிக் சர்ஜரி மூலமாக லேடி காகா போன்ற முகத்தோற்றம் பெற்றுள்ளார். இவர் இந்த தோற்றத்தை லேடி காகாவிற்கு அர்பணிக்கிறேன் என கூறியுள்ளார்.

Image Source: Imgur

பமீலா ஆண்டர்சன்!

பமீலா ஆண்டர்சன்!

19 வயது நிரம்பிய ஷா எனும் இந்த பெண், ப்ளேபாய் மாடல் பமீலா போல தனது முகத்தை மாற்றிக் கொள்ள முயற்சித்தார். இவர் இதற்காக உதடு மற்றும் மார்பக மகுதிகளில் அறுவை சிகிச்சை செய்துக் கொண்டார்.

Image Source: Wikimedia

ஜெனிபர் அனிஸ்டன்

ஜெனிபர் அனிஸ்டன்

27 வயது நிரம்பிய கெல்லி சட்லர் எனும் தாய்.பிளாஸ்டிக் சர்ஜரிகள் மேற்கொண்டு தனது முக தோற்றத்தை ஜெனிபர் அனிஸ்டன் போல மாற்றிக் கொண்டார். இவர் இதை ஜெனிபர் அனிஸ்டன் மீதான விருப்பதால் செய்யவில்லை, தனது கணவர் இதை கண்டு வருந்த வேண்டும் என செய்துள்ளார்.