இந்தியா செய்திகள்

தூக்கத்தை தொலைத்த தூத்துக்குடி மக்கள்.. நேற்று இரவு கடலில் திரும்ப திரும்ப அரங்கேறிய திகில் நிகழ்வு

உலகெங்கும் கடலில் ஏற்படும் மாற்றங்கள் புது வருடம் பிறப்பதற்கு முன்பே மக்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.


தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயல் கடற்கரை கிராமத்தில், கடலோரத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் தூண்டில் வளைவு பாலம் உள்ளது.

இங்கு நேற்று(திங்கட்கிழமை) மாலை 6.30 மணியளவில் தூண்டில் வளைவு பாலத்திற்கு அருகே சுமார் 40 சிறிய, பெரிய அளவிலான டால்பின் மீன்கள் கரை ஒதுங்கின.

ஒவ்வொரு டால்பின்களும் சுமார் 2 மீட்டர் நீளமும், 100 கிலோ எடையுடன் இருந்தன. அதனை மீட்டு கடலுக்குள் கொண்டு சென்று விட்டனர் அப்பகுதி மீனவர்கள். இருந்த போதிலும் மீண்டும் கரைக்கு திரும்பி இறந்து போயின.

இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதியைச் சேர்ந்த விடுமுறைக்கு வந்திருந்த தனியார் கப்பல் மாலுமிகள், மீனவர்கள் மற்றும் இளைஞர்கள் செல்லிடப்பேசி, கட்செவி அஞ்சல் உதவியுடன் ஒருவரையொருவர் தொடர்பு கொண்டு அங்கு திரண்டனர்.

அதனை தொடர்ந்து மீண்டும் மீண்டும் கரை ஒதுங்கிய டால்பின் மீன்களை சிறிய படகுகள் உதவியுடன் மீண்டும் கடலுக்குள் அனுப்பினர்.

ஆனால் அந்த மகிழ்ச்சி சிறிது நேரம் தான் நீடித்தது. இரண்டாவது முறை கடலில் விடப்பட்ட மீன்களும் இறந்த நிலையில் கரை ஒதுங்கின.

இவ்வாறு 15க்கும் மேற்பட்ட டால்பின்கள் நேற்று தூத்துக்குடியில் கரையொதுங்கி உள்ளது.

கடலின் ஆழமான பகுதியில் வாழும் இந்த டால்பின் மீன்கள் திடீரென கரைக்கு வந்தது, பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.


கடலுக்கு அடியில் ஏற்படும் மாற்றம் மற்றும் பருவநிலை மாற்றத்தினாலேயே இவ்வகை மீன்கள் கரைக்கு வருவதாக மீனவர்கள் கூறினர்.

நேற்று மலையில் நாகையில் கடல் உள்வாங்கியதாகவும், சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது.

இதையடுத்து, அப்படி வெளிவந்த செய்திகள் உண்மையல்ல என்றும் அவை வதந்திகள், மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சுரேஷ்குமார் அறிவித்தார்.

இந்நிலையில், சுனாமி பீதி அடங்குவதற்குள், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே 15 டால்பின்கள் திடீரென்று மொத்தமாக கரை ஒதுங்கியது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..