பல்சுவை

தன் மகளுடன் டேட் செய்ய 7 நிபந்தனை விதித்த சூப்பர்ஸ்டார் நடிகர் – அடேயப்பா!

ஷாருக்கான் இந்தியாவின் பெரிய சூப்பர்ஸ்டார். என்டர்டெயினர் என்ற பெயர் பெற்றவர். மாஸ் அன்ட் கிளாஸ் இரண்டிலும் தன் நடிப்பை நிரூபித்தவர். இவரது மகள் சுஹானா கான் வளர்ந்து வருகிறார். ஒருமுறை குழந்தை வளர்ப்பு மற்றும் தன் மகள் பற்றி ஒரு பேட்டியில் ஷாருக்கான் பேசியிருந்தார்.


அதில், யார் வேண்டுமானலும் என் மகளுடன் டேட்டிங் செய்யலாம். ஆனால், அதற்கு ஏழு நிபந்தனைகள் இருக்கின்றன என கூறினார்…

7 நிபந்தனைகள்!

7 நிபந்தனைகள்!

நல்ல வேலை இருக்க வேண்டும்!
எனக்கு உன்னை பிடிக்காது என்பதை முதலில் மனதில் வைத்துக் கொள்.
நான் எல்லா இடங்களிலும் இருப்பேன் என்பதை மறந்துவிட கூடாது.
முக்கியமாக டேட்டிங் செய்யும் முன்னர் ஒரு வழக்கறிஞரை தேடிபிடித்து கொள்.
என் மகள் எனது இளவரசி. நீ கைப்பற்றி வெற்றிக் கொள்ளும் பொருளல்ல.
நான் சிறைக்கு செல்ல அஞ்ச மாட்டேன்.
நீ என் மகளுக்கு என்ன செய்கிறாயோ, அதையே நான் உனக்கும் செய்வேன்!
இதழை கிழிப்பேன்!

இதழை கிழிப்பேன்!

என் மகளை முத்தமிடும் தைரியம் இருக்கும் நபரின் இதழ்களை கிழித்திடுவேன் என் காபி வித் கரன் சீசன் ஐந்தின் முதலாவது எப்பிசோடில் கலந்து கொண்ட போது ஷாருக் கான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மிரட்டலா? பாசமா?

மிரட்டலா? பாசமா?

ஆரம்பத்தில் ஷாருக்கான் கூறிய நிபந்தனைகள் மிரட்டுவது போன்று இருந்தாலும். கடைசியில் அவர் கூறியிருப்பது. தன் மகளுக்கு பிடித்தவனாக இருக்க வேண்டும். அவன் என் மகளை சிரிக்க வைத்தால். நானும் அவனை சிரிக்க வைப்பேன்.

அதே, அவன் என் மகளை துன்புறுத்தினால். நான் அதற்கு ஈடாக அவனை துன்புறுத்துவேன் என பாசத்தால் எச்சரித்துள்ளார்.

ரியல் ஹீரோ!

ரியல் ஹீரோ!

ஒவ்வொரு மகளின் முதல் ஹீரோ அப்பா என்பது நாம் பரவலாக காணப்படும் கூற்று. இது உண்மையும் கூட. இந்த ஹீரோ என்ற நிலையை அடைய எல்லா அப்பாக்களும் தனது மகளுக்கு சிறந்த காவலனாக இருக்க வேண்டும்.

அந்த வகையில் நான் பெரிய நடிகன் என்பதை தாண்டி, தன் மகளின் சிறந்த காவலன் என்பதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சுட்டிக்காட்டி கொண்டே இருக்கிறார் ஷாருக்கான்.

அனைவருக்கும் பாடம்!

அனைவருக்கும் பாடம்!

இன்று வளர்ந்து வரும் அதிநவீன சமூகத்தில் பெற்றோர் பிள்ளை உறவில் ஒரு கேப் விழுந்துள்ளது. அது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தன் குழந்தை என்ன செய்கிறான் என்பதை ஃபேஸ்புக், ட்விட்டரில் பார்த்து தெரிந்துக் கொள்ளும் அப்பா, அம்மாக்களும் இருக்கிறார்கள் என்பதை நாம் மறுத்து விட முடியாது.

அக்கறை வேண்டும்!

அக்கறை வேண்டும்!

முக்கியமாக பெண் குழந்தைகள் பெற்றுள்ள பெற்றோர் அவர்கள் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும். அவரது பாதுகாப்பு குறித்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

கிங் கான்!

கிங் கான்!

அந்த வகையில் தன் மகளுக்கு சுதந்திரமும், தகுந்த பாதுகாப்பும் அளித்து வருவதை விட, நான் சிறந்த தந்தையாக விளங்குகிறேன் என்பதையும் நிரூபணம் செய்து ரியல் ஹீரோவாக, மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு ஒரு ரோல்மாடலாக இருக்கிறார் ஷாருக்.