பல்சுவை

40-களை கடந்தும் கவர்ச்சி கட்டுடல் மெயின்டெயின் செய்யும் இந்திய நடிகைகள்!

ஃபிட்னஸ் மற்றும் அழகு இருக்கும் வரை தான் சினிமாவில் ஒரு முதன்மை நடிகையாக திகழ முடியும் என்பது ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை எழுதப்படாத சட்டமாக இருந்து வருகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நவரசமும் முகத்தில் கொண்டு வந்தால் அவர் சிறந்த நடிகை.


ஆனால், இப்போது உடற்கட்டு சரியாக இருக்க வேண்டும். உடற்பயிற்சி தவறாமல் செய்ய வேண்டும். கொஞ்சம் உடல் பூசினால் கூட, கட்டுடல் மேனியுடன் காண்பிக்க வி.எப்.எக்ஸ் செய்ய கோடிகளை செலவழித்த சங்கதியும் நான் கண்டுள்ளோம்.

இந்த லிஸ்டில் வயது எவ்வளவு ஏறினாலும் அழகும், உடல் எடையும் கொஞ்சமும் ஏறாமல் பார்த்துக் கொள்வதிலும், தங்கள் அழகை பேணிக்காப்பதிலும் கில்லியாக இருந்து வரும் சில நடிகைகள்…

ஷில்பா ஷெட்டி!

ஷில்பா ஷெட்டி!

ஷில்பாவிற்கு வயது 41 என்று கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள். யோகா, ஃபிட்னஸ் செய்து இன்னும் தான் நடிக்க வந்த போது எப்படி இருந்தாரோ அதே அழகிய லுக்கில் வலம்வந்து கொண்டிருக்கிறார்.

சுஷ்மிதா சென்!

சுஷ்மிதா சென்!

சிங்கிள் மதர் சுஷ்மிதா சென். திருமணம் செய்ய விருப்பம் இல்லாத இவர் குழந்தை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். 41 வயதிலும் பிரபஞ்ச அழகி எனும் பெயரை அப்படியே வைத்துக் கொண்டு இருக்கிறார்.

சோனாலி பிந்த்ரே!

சோனாலி பிந்த்ரே!

அதிகம் திரைகளில் இப்போது தென்படுவதில்லை எனிலும், தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்.

40-களின் வட்டத்தில் நுழைந்துள்ள இவர் சினிமாவில் தலைககட்டாவிட்டாலும் தனது அழகை பேணிக்காத்து வருகிறார்.

கஜோல்!

கஜோல்!

இவருக்கு அறிமுகம் தேவையில்லை. வயது என்பது வெறும் எண்ணிக்கை தான் என்பதை நிரூபித்து வரும் மற்றுமொரு இந்திய நடிகை. தன் மகளுக்கே வரும் காலத்தில் இவர் பொடிக் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஐஸ்வர்யா ராய்!

ஐஸ்வர்யா ராய்!

16 ஆண்டுகளாக கேன்ஸ் திரைப்பட விழாவில் உலக அழகி நான் தான் என நிரூபித்து வரும் ஐஸ். எப்படி இன்னும் அப்படியே இருக்கிறார் என்பதை அபிஷேக்பச்சனிடம் தான் கேட்க வேண்டும்.

தபு!

தபு!

முகத்தில் கொஞ்சம் முதுமை எட்டிப் பார்க்க துவங்கினாலும் தனது உடற்கட்டை அன்று முதல் இன்று வரை பேணிக்காத்து தொடர்ந்து இந்திய மொழி படங்களில் நடித்து வருகிறார் தபு.

மஞ்சு வாரியர்!

மஞ்சு வாரியர்!

தென்னிந்தியாவில் மஞ்சு வாரியார் நாற்பதை நெருங்கி வரும் நடிகை. இப்போதும் முதன்மை நடிகையாக நடிக்க திறமையும் அழகும் சம அளவு நிரம்பியிருக்கும் நடிகை.

நதியா!

நதியா!

நதியாவிற்கு வயது ஐம்பது. ஆனால், அவரை புதியதாக காணும் யாரும் அபப்டி கூற மாட்டார்கள்.

ஜோதிகா!

ஜோதிகா!

இரண்டு பிள்ளைகளுக்கு தாய். ஆனால், இன்றும் முதன்மை நாயகியாக நடித்து தனது திறமையை நிரூபித்து வருகிறார். இதற்கு பக்க பலமாக இருப்பது இவரது கணவரும் நடிகருமான சூர்யா.

ஷோபனா!

ஷோபனா!

மற்றவர்களோடு ஒப்பிடுகையில் தனது பரத திறமையால் உடற்கட்டை பேணிக்காத்து வரும் நடிகை, பரதநாட்டிய கலைஞர் ஷோபனா. இவருக்கு வயது 47.