பல்சுவை வரலாறு

பதவி ஆசைக்காக இலட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த கொடூர தலைவர்கள்!

இலட்சக்கணக்கான மக்களை ஈவிரக்கமற்ற முறையில் தனது பதிவி ஆசைக்காக கொன்று குவித்து கொடூர மனம் படைத்த உலக தலைவர்கள் பலர் உள்ளனர்.


ஆதி காலம் முதல் அதிநவீன காலம் வரை என வேல்கம்பு, வில் அம்பு கொண்டு சண்டையிட்ட நாள் முதல் பீரங்கி முழங்க வெடித்து சிதறடித்த நாள் வரை இவர்கள் பல முகம் கொண்டிருந்தாலும் மனம் ஒன்றாக தான் கொண்டிருந்துள்ளனர்…

அடால்ப் ஹிட்லர்!

அடால்ப் ஹிட்லர்!

வாழ்ந்த காலம்: 1933-1945.

ஹிட்லர் பற்றி கூறாமல் இந்த கட்டுரைக்குள் எப்படி போக முடியும். உலகை ஆளவேண்டும் என்ற ஒற்றைக் காரணத்திற்காக ஆயிரக்கணக்கான மக்களை தயவுதாட்சணம் பாராமல் கொன்று குவித்தவர்.

செங்கிஸ்கான்!

செங்கிஸ்கான்!

வாழ்ந்த காலம்: 1206-1227.

செங்கிஸ்கான் தனது இளம் பருவத்தில் அடிமையாக சில ஆண்டுகள் கழித்ததாகவும். பிறகு மங்கோலிய பழங்குடியினர் இணைத்து கொண்டு மத்திய ஆசியா மற்றும் சீன பகுதிகளை வென்றதாகவும் வரலாற்று கூற்றுகள் கூறுகின்றன.

இவரது கதாபாத்திரம் மிக கொடூரமானதாக தான் உருவகுக்கப்பட்டுள்ளது. இவர் தான் வெல்லும் இடங்களில் வசிக்கும் மக்களை கொத்து கொத்தாக கொன்றுக்குவிக்கும் பழக்கம் கொண்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது.

திமுர்!

திமுர்!

வாழ்ந்த காலம்: 1370-1405.

மேற்காசிய பகுதியில் பெரும் இராணுவப்படை கொண்டு தலைமை தாங்கி சென்றவர் திமுர். இன்றைய ஈரான், சிரியா ஆப்கான் போன்ற பகுதிகளை ஆண்டவர். இவர் மனிதர்களை உயிருடன் வைத்து புதைத்து கட்டிடங்கள் கட்டியதாகவும், கிளர்ச்சியாளர்களை கொன்று குவித்தவர், 70 ஆயிரம் பேரின் தலைகளை கொய்து தூபிகள் கட்டினார் என்றும் கூறப்படுகிறது.

குயின் மேரி!

குயின் மேரி!

வாழ்ந்த காலம்: 1553-1558

எட்டாம் ஹென்றியின் ஒரே பிள்ளை. முதலாம் மேரியான இவர் இங்கிலாந்தின் இராணியாக 1553ல் முடி சூடிக் கொண்டார். பதவிக்கு வந்த உடனே கத்தோலிஸம் மீண்டும் கொண்டு வந்தார்.

இவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த இரண்டாம் பிலிப்பை திருமணம் செய்து கொண்டார். இதை எதிர்த்து சீர்திருத்தம் கொண்டு வர முயன்ற நூற்றுக்கணக்கானவர்களை தீமூட்டி கொன்றார். இதற்கு பிறகே இவருக்கு Bloody Mary என்ற புனைப்பெயர் வந்தது.

விளாடிமிர் லெனின்!

விளாடிமிர் லெனின்!

வாழ்ந்த காலம்: 1917-1924.

அக்டோபர் புரட்சியை தலைமை தாங்கியவர் லெனின். இந்த புரட்சி, போர் மற்றும் பஞ்சத்தின் போது தனது நாட்டு மக்கள் அவமதிப்பு கண்டு தனது எதிரிகள் அனைவரையும் இரக்கமற்று நசுக்கினார்.

 

மாவோ சேதுங்!

மாவோ சேதுங்!

வாழ்ந்த காலம்: 1949-1976.

கமியூனிஸ்ட் தலைவர் கீழ், தொழிற்சாலை, விவசாயம் சீன அரசு கட்டுப்பாட்டுக்கு சென்றது. இதை எதிர்க்கும் நபர்களை வேகமாக ஒடுக்கப்பட்டனர். மாவோ ஆதரவாளர்கள் இவர் சீனாவை மார்டனாக மாற்றினார் என கூறினார்.

ஆனால், மற்றவர்கள் இவரால் 40 மில்லியன் மக்கள் பசி, பட்டினி, கடுமையான வேலையால் இறந்தனர், கொல்லப்பட்டனர் என கூறினர்.

இடி அமீன்!

இடி அமீன்!

வாழ்ந்த காலம்: 1971-1979 .

உகாண்டாவின் அதிபராக இடி அமீன் தன்னை தானே அறிவித்து கொண்டார். எட்டு ஆண்டுகளில் இவர் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்தார்.ஆகஸ்டோ பினோசே!

ஆகஸ்டோ பினோசே!

வாழ்ந்த காலம்: 1973-1990.

பினோசே சிலி அரசை அமெரிக்க உதவியுடன் 1973ல் தூக்கி வீசினார். இந்த காலத்தில் 35 ஆயிரம் மாயமானார்கள் என்றும்.

அவர்களை கடத்தி சித்திரவதைக்கு ஆளாக்கினர் என்றும் கூறப்படுகிறது. மனிதர்களை வன்கொடுமை செய்த குற்றச்சாட்டு இருக்கும் போதே இவர் இறந்தும் போனார்.