பல்சுவை

வாழ்க்கை துணை ஏமாற்றுவாரா? மாட்டாரா? மச்ச ஜோதிடம் என்ன சொல்லுது பாருங்க!

துணையின் உடலில் இருக்கும் மச்சத்தை வைத்து, அவர் இல்லறத்தில் எப்படிப்பட்ட நபராக இருப்பார் என அறியலாம் என மச்ச ஜோதிடம் கூறுகிறது.


அந்த வகையில் கை, கால், நெற்றி, இடுப்பு என உடலில் எங்கெங்கே மச்சம் இருந்தால், அந்த நபர் இல்வாழ்க்கை குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து இங்கு காணலாம்…

நெற்றி!

நெற்றி!

கடின சூழல்களை எதிர் கொள்பவர்கள். இது திருமண பந்தத்திலும் தொடருமா என சொல்ல இயலாது. இவர்கள் நம்பகமானவர்கள் தான். ஆனால், ரொமான்ஸ், காதலை வெளிப்படுத்துவதில் சற்றே பின்தங்கி காணப்படுவார்கள்.

தாடை!

தாடை!

இவர்களுக்கு அவர்கள் துணை எதிர்பார்க்கும் அளவிற்கு பேரார்வம் இருக்காது. இதனால், இல்வாழ்க்கை பெரிதாக பிரகாசமாக இருக்காது.

கன்னம்!

கன்னம்!

வலது கன்னத்தில் மச்சம் இருக்கும் நபர்கள் மிக கடினமாக உழைப்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் அதிகமாக நேசிப்பார்கள். இடது கன்னத்தில் மச்சம் இருந்தால், அவர்கள் தங்கள் துணையை ஏமாற்றுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதாம்.

கை!

கை!

வலது கையில் மச்சம் இருந்தால் லக். அவர்கள் மிகவும் விசுவாசமானவர்களாக திகழ்வார்கள். இவர்களது காதலை யாராலும் பிரதிபலிக்கவோ, அந்த அளவிற்கு காதலிக்கவோ முடியாது.

இடது புறம் மச்சம் இருந்தால் அவர்களுடைய இல்வாழ்க்கையில் தடங்கல்கள் கொஞ்சம் எட்டிப்பார்க்கும்.

கண்!

கண்!

வலது கண்ணில் மச்சம் இருந்தால், அவர்கள் உண்மையாக, ஆழமாக காதலிப்பார்கள். இடது கண்ணில் மச்சம் இருந்தால் திருமண வாழ்வில் மோதல்கள் ஏற்படும்.

புருவம்!

புருவம்!

புருவத்தில் மச்சம் இருப்பவர்கள் எந்த உறவிலும் பிடிப்புடன் இருக்க மாட்டார்கள். இவர்களால் இல்லறத்தில் சங்கடங்கள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன.

மூக்கு!

மூக்கு!

இவர்கள் நன்கு ஃப்ளர்டிங் செய்வார்கள். தானாகவே ஒரு சிக்கலில் சென்று அமர்ந்துக் கொள்வார்கள். எனவே, இவர்கள் உற்று கவனிக்க வேண்டியது அவசியம்.

மூக்கு நுனி!

மூக்கு நுனி!

இவர்களது இல்லற வாழ்வில் செக்சுவல் பிரச்சனைகள் உண்டாகலாம். மேலும், இவர்கள் வாழ்வில் எண்ணிலடங்கா பிரச்சனைகள் எழும்.

இடது, வலது மூக்கு பகுதி!

இடது, வலது மூக்கு பகுதி!

இவர்கள் ஒரு பிரியா உறவில் நிலைத்து இருப்பார்கள். பெண்கள் மிகவும் அன்பாக, கனிவாக வாழ்நாள் முழுதும் திகழ்வார்கள்.

கீழ் இதழ்!

கீழ் இதழ்!

இவர்கள் தாம்பத்திய வாழ்வில் மேலோங்கி காணப்படுவார்கள். உடலுறவு வாழ்க்கை காரணமாகவே இவர்கள் வாழ்வில் அழுத்தம் அதிகரிக்கும்.

கழுத்து எலும்பு (Collar Bone)

கழுத்து எலும்பு (Collar Bone)

இவர்கள் தங்கள் காதல் துணைக்கு மிகவும் உறுதுணையாக, அரவணைப்பாக இருப்பார்கள்.

இடுப்பு!

இடுப்பு!

இவர்கள் தங்கள் துணைக்கு மிகவும் இனிமையான நபராக திகழ்வார்கள்.