இந்தியா

பவர் கட்: இருட்டில் கணவர் என நினைத்து வேறு ஆணுடன் உறவு கொண்ட பெண்

இந்தியாவில் மின்சாரம் இல்லாததால் இருட்டில் கணவர் என நினைத்து வேறு ஆணுடன் படுக்கையை பகிர்ந்து கொண்ட பெண்ணால் பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் மும்பை நகரில் பொவாய் பகுதியில் இரு தினங்களுக்கு முன்னர் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அந்த பகுதியே இருளில் மூழ்கியது. அந்த பகுதியில் வசிக்கும் 26 வயதான பெண்ணின் வீட்டு கதவை நள்ளிரவில் யாரோ தட்டியுள்ளனர்.

அந்த பெண் தூக்க கலக்கத்தில் கதவை திறக்க உள்ளே நபர் ஒருவர் வந்துள்ளார். இருட்டில் அவர் முகம் சரியாக தெரியாததால் அவரை தன் கணவர் என அந்த பெண் நினைத்துள்ளார்.

பின்னர் அந்த பெண்ணும், அந்த நபரும் படுக்கையறையில் சென்று ஒன்றாக படுத்து கொண்டனர்.

அங்கு அந்த பெண்ணை உடன் இருந்த நபர் தொட்டதற்கு அவர் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. அதன் பின்னர் காலை விடிந்ததும், படுக்கையில் தன்னுடன் படுத்திருந்த நபரை பார்த்து அந்த பெண் அதிர்ச்சியடைந்து கத்தியுள்ளார்.

காரணம், அவருடன் இரவு படுக்கையை பகிர்ந்து கொண்டது பக்கத்து வீட்டுக்காரர் என்பது அப்போது தான் தெரிந்தது. பின்னர் இந்த விடயம் அவர் கணவருக்கு தெரியவர பொலிசில் புகார் செய்துள்ளனர்.

இதையடுத்து பாலியல் பலாத்கார புகாரில் பக்கத்து வீட்டுக்காரரான விஸ்வநாத் என்கிற விஷ்ணுவை (32) பொலிசார் கைது செய்துள்ளனர்.

Post Comment