பல்சுவை

பெப்ஸி உமா பற்றி பலரும் அறிந்திராத சுவாரஸ்யமான உண்மைகள்!

90-களில் சன்டிவி பார்வையாளர்களுக்கு மட்டுமே தெரியும், வியாழக்கிழமை இரவு எவ்வளவு அரிதான ஒன்றென்று. எத்தனை முயற்சிகள், “கீப் ட்ரை, கீப் ஆன் ட்ரை..” என்ற வார்த்தையை உச்சரிப்பது, தனித்துவம் வாய்ந்த அவரது சிரிப்பு என பெப்ஸி உமா மிகவும் ஸ்பெஷலாக தான் இருந்தார்.


அன்றைய தமிழ் சினிமா நடிகைகளை விட கொள்ளை அழகாக இருந்தார் பெப்ஸி உமா. மார்டர்ன் உடை உடுத்தாமல், புடவை தான் என்றும் உடுத்துவார். அது கூடுதல் சிறப்பு. இன்று வரையிலும் அவரது இடத்தை நிரப்ப, பூர்த்தி செய்ய எந்த வி.ஜே-வினாலும் முடியவில்லை.

ப்ளஸ் டூ!

ப்ளஸ் டூ!

ப்ளஸ் டூ படிக்கும் போதே தூர்தர்ஷனில், ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்துவிட்டார் பெப்ஸி உமா. இது தான் அவரது வி.ஜே வாழ்க்கையின் முதல் படி. இதன் மூலமாக தான் சன்டிவியில் வாய்ப்பு கிடைத்து பெப்ஸி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்க ஆரம்பித்தார்.

பிரம்மாண்டம்!

பிரம்மாண்டம்!

பெப்ஸி உமாவிற்கு அந்நாட்களில் ஒரு சினிமா நடிகைக்கு இணையான ரசிகர் கூட்டம் இருந்தது. இப்போது போல போலியாக தங்களுக்கு தெரிந்த நபர்களை வைத்து போலியாக கால் செய்யாமல், ரசிகர்கள் கால்கள் மூலம் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடியது.

கட் அவுட்!

கட் அவுட்!

பெப்ஸி உமாவிற்கு நடிகைகளுக்கு இணையாக கட் அவுட் எல்லாம் வைத்தனர். அதே போல ஒரு நிகழ்ச்சியை அதிக வருடங்கள் தொகுத்து வழங்கிய ஒரே தொகுப்பாளினி பெப்ஸி உமா தான். இவர் பெப்ஸி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை 15 வருடங்கள் தொகுத்து வழங்கினார்.

ரஜினி, கமலை உதறிய உமா!

ரஜினி, கமலை உதறிய உமா!

ரஜினி, கமல், மணிரத்னம், பாரதிராஜா என பல தமிழ் சினிமா ஜாம்பவான்கள் வாய்ப்பளித்து அழைத்த போதிலும், ஆர்வம் இல்லை, சினிமாவில் நடிக்கும் அளவிற்கு பொறுமை இல்லை. நான் ஒரு சோம்பேறி எனக் கூறி வாய்ப்பை உதறிவிட்டார்.

மீடியாவில் இருந்து ஒதுங்கினார்...

மீடியாவில் இருந்து ஒதுங்கினார்…

புகழில் இருந்த போது, தன்னருகே இருந்த கூட்டம், தான் மீடியாவை விட்டு ஒதுங்கிய பிறகு ஒதுங்கி போனது. நான் மீண்டும் மீடியாவிற்கு வந்தபின் வந்து ஒட்டிக்கொண்டனர். அரசியல், உடல்நலக் குறைபாடு போன்ற காரணத்தால் மீடியாவை விட்டு சிறிது காலம் உமா ஒதுங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உபத்திரம் செய்த ப்ரோக்ராம் தயாரிப்பாளர்!

உபத்திரம் செய்த ப்ரோக்ராம் தயாரிப்பாளர்!

இவர் சன்டிவியில் இருந்து வெளியேறிய பிறகு, சிறித கலா இடைவேளைக்கு பிறகு, ஜெயாடிவியில் ஆல்பம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க துவங்கினார். அந்த நேரத்தில், ஜெயா டிவியின் ப்ரோக்ராம் தயாரிப்பாளர் ஒருவர் இவரை வார்த்தைகளாலும், செய்கைகளாலும் தொந்தரவு செய்தார் என்பதால் அவர் மீது புகார் கொடுத்தார் உமா. இதனால், அவர் கைதும் செய்யப்பட்டார்.