யாழில் இளைஞன் தற்கொலை முயற்சி..வெளிவந்த அதிர்ச்சி உன்மைகள்.. யாழ் யுவதி ஒருவர் செய்துள்ள காரியத்தால் இளைஞன் ஒருவர் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் ஏழலைப்பகுதியை சேர்ந்தவர் 27 வயது பெண். இவர் கடந்த 2012.03.07 அன்று சட்டபூர்வமாக தனது காதலனை சட்டபூர்வமாக பதிவுத்திருமணம் செய்து சந்தோசமாக வாழ்ந்துவந்துள்ளார்.

இந்நிலையில், தனது உறவினர்கள் சிலரை பார்க்க வேண்டும் என கூறி 3 மாத விசாவில் இந்தியா சென்றுள்ளார். பின்னர் அங்கு இளைஞர் ஒருவரை திருமணம் முடித்துள்ளார்.

3 மாத விசாவில் கடந்த 2014 ம் ஆண்டு சென்ற மனைவி வருவார் வருவார் என காத்திருந்து,3 வருடங்களிற்கு பின்னர் மனைவி வேறு திருமணம் முடித்த விடயம் தற்போது தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் கணவருடன் தொலைபேசியிலும் தொடர்பில் இருந்திருக்கின்றார் இவர். அதுவும் ஏனோ தானோ என்று. 04.02.2017 ற்கு பிறகு தொடர்பை முற்றாக அறுத்த குறித்த யுவதி 06.02.2017 ல் புதிய மாப்பிள்ளையை ஏமாத்தி கரம்பிடித்துள்ளார்.

இதையறியாத ஏமாளி மாப்பிள்ளை புதையல் கிடைத்ததாக சந்தோசத்தில் மகிழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது.

பிடிக்காவிட்டால் விலகிச்செல்வதற்கு சட்டத்தில் இடமுண்டு.ஆனால் ஏற்கனவே நடந்த திருமணத்தையும் வைத்துக்கொண்டு இரண்டு ஆண்களின் பெயர்களை பயன்படுத்த சட்டம் ஒருபோதும் அனுமதிக்காது.

உடனடியாக பாதிக்கப்பட்ட இளைஞனிற்கு திருமண முறிவு பத்திரத்தை வளங்கிவிட்டு பின்னர் உமது புதிய கணவருடன் குடும்பம் நடத்தலாம். இந்த விடயம் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல்களும் ஆதாரங்களும் வளங்கப்பட்டுள்ளது.

இதை சற்றும் எதிர்பாராத இளைஞன் மிகவும் மனமுடைந்து போயுள்ளார்.இதனிடையில் இதை அறிந்த அயலவர் வட்டமும் இளைஞனை நையாண்டி செய்வது போல இருக்கின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில்,ஒருவரை எவ்வாறு ஆறுதல் படுத்துவது என்பது நம்மில் பலரிற்கு தெரிவதில்லை.

சிலரின் வேடிக்கையான பேச்சுக்கள் பாதிக்கப்பட்டவரை தற்கொலைக்கும் தூண்டுவதாக அமைகின்றது.சிந்தித்து செயற்படுங்கள்