சர்வதேசம்

இருட்டிய நேரத்தில் ஆடைகள் களையப்பட்டு.. புனர்வாழ்வு மையத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

ஹைதராபத்தில் உள்ள புனர்வாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட ரேணுகா என்ற பெண் அங்கு தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து கண்ணீர் மல்க கூறியுள்ளார். பீகாரை பிறப்பிடமாக கொண்ட இப்பெண், கடந்த 2014 ஆம் ஆண்டு தெருவில் இருந்து மீட்கப்பட்டு புனர்வாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

32 வயது மதிக்கத்தக்க இவரை, அங்கு சங்கிலியால் கட்டிவைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். ஆடைகள் இன்றி நிர்வாணப்படுத்தியும் மோசமாக துன்புறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து ரேணுகா கூறியதாவது, அங்கு அனுமதிக்கப்பட்ட நாட்கள் முதல் நான் சித்ரவதை அனுபவித்து வருகிறேன், இருட்டிய பிறகு சில ஆண்கள் அங்கு வருவார்கள், எனது வாயில் துணியை வைத்து அடைத்து விட்டு என்னை பலாத்காரம் செய்வார்கள்.

இருட்டிய நேரத்தில் அவர்கள் வருவதால், இதுவரை நான் அவர்களை அடையாளம் கண்டுகொண்டதில்லை, ஒரு நாள் அவர்களை தாக்க முயற்சித்தேன், ஆனால் என்னால் முடியவில்லை.

தெருக்களில் தான் பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று புனர்வாழ்வு மையத்திற்கு வந்தால், இங்கு அதைவிட மோசமாக இருக்கிறது என கூறியுள்ளார்.

Post Comment