செய்திகள்

நச்சுன்னு கிஸ்ஸடிக்க சிக்குன்னு 7 காரணம் இருக்கு செல்லம்!

அன்பு/காதல் அளவுக்கு அதிகமாகும் போது, அதை வெளிப்படுத்தும் ஒரு செயல் தான் முத்தம் கொடுப்பது. அதிலும் காதலிக்கும் நம் வாழ்க்கைத் துணைக்கு கொடுக்கும் முத்தத்தில் நிறைய நன்மைகள் உள்ளன. அதில் இருவருக்குள்ளும் உள்ள அன்பு மற்றும் பிணைப்பு அதிகமாவதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

அது எப்படி ஆரோக்கியம் மேம்படும் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். மேலும் இந்த ரகசியம் தெரிந்த பின், சாதாரணமாகவே ரொமான்ஸில் பின்னி பெடலெடுக்கும் நீங்கள், இதைப் படித்த பின் இன்னும் குஷியாக களத்தில் இறங்குவீர்கள்.நீங்க கொடுக்கும் முத்தம் சும்மா நச்சுன்னு இருக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்…அதுமட்டுமின்றி, உங்கள் துணை வேண்டாம் என்று சொன்னாலும், இதன் நன்மைகளை சொல்லியே அவர்களை மயக்கி உங்கள் வழிக்கு கொண்டு வந்துவிடுவீர்கள்.

சரி, இப்போது முத்தம் கொடுப்பதன் மூலம் எப்படி ஆரோக்கியம் மேம்படும் என்று பார்ப்போம்.பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் பிணைப்பை அதிகரிக்கும் காதலர்கள் கன்னம், நெற்றி போன்ற இடங்களில் முத்தம் கொடுப்பதை விட, உதட்டோடு உதடு முத்தத்தைப் பரிமாறிக் கொள்ளும் போது, அவர்களுக்குள் உள்ள பிணைப்பு, அன்யோன்யம் இன்னும் அதிகமாகும். இதற்கு முத்தம் கொடுக்கும் போது உடலில் உற்பத்தியாகும் ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோன் தான் காரணம்.

பாலுணர்வு அதிகமாகும் உடலுறவு கொள்ளும் முன் விளையாடப்படும் விளையாட்டுக்களில் முத்த விளையாட்டு முதன்மையானதும், முக்கியமானதும் கூட. அதிலும் துணைக்கு மனதளவில் இருந்து முத்தம் கொடுக்கும் போது, அவர்களின் மேல் அன்பு அதிகரித்து, உணர்ச்சிகள் தூண்டப்பட்டு, அதன் காரணமாக உறவில் உச்சக்கட்ட இன்பத்தை உணர முடியும்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கும் போது, ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எச்சில் பரிமாற்றம் நடைபெறுவதோடு, அதனை தொடர்ந்து உடலுறவு கொள்ள வழிவகுக்கிறது. இந்த செயல் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்கும். அதிலும் அடிக்கடி உடலுறவில் ஈடுபடுகிறவர்களுக்கு, மற்றவர்களைக் காட்டிலும் நோயெதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும். இதனால் இத்தகையவர்களுக்கு நோய்களின் தாக்குதல் குறைவாக இருக்கும்.

சந்தோஷமாக வைத்துக் கொள்ளும் முத்தம் கொடுப்பதன் மூலம் வெளிவரும் என்டோபின்கள் மற்றும் எண்டோர்பின்கள், ஒருவரை சந்தோஷமாக வைத்துக் கொள்ளும். ஆகவே நீங்கள் அதிக மன கவலையாகவோ அல்லது மன கஷ்டமாகவோ இருக்கும் போது, மருத்துவரை அணுகாமல், உங்கள் துணைக்கு முத்தம் கொடுங்கள்.

இதனால் உங்கள் கஷ்டம் நீங்கி, மனம் சந்தோஷமாக இருக்கும். வலியைக் குறைக்கும் அனல் பறக்க முத்தம் கொடுக்கும் போது, உடலில் இருந்து அட்ரினலின் என்னும் வலியைக் குறைக்கும் ஹார்மோன் வெளியேற்றப்படும். ஆகவே தலை வலி, உடல் வலியின் போது, உங்கள் துணையை இறுக்க கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து, உறவில் ஈடுபடுங்கள்.

மற்ற மருந்துகளை விட, இது உடனடி நிவாரணத்தை வழங்கும். மன அழுத்தத்தைக் குறைக்கும் அலுவலகத்தில் வேலைப்பளுவின் காரணமாக அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தால், வீட்டிற்கு வந்ததும், உங்கள் துணையை கட்டிப்பிடித்து முத்தம் கொடுங்கள். இதனால் அவர்களின் பாசமிக்க முத்தம், மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் அளவைக் குறைத்து, மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, ரிலாக்ஸ் அடையச் செய்யும்.

Post Comment