செய்திகள்

குஷ்புவின் அந்த படத்தை வெளியிட்ட டான்ஸ் மாஸ்டர்..!

பிரபல திரைப்பட நடன இயக்குனர் கலாவின் சகோதரி பிருந்தா கடந்த 1994ம் ஆண்டில் கே.எஸ்.சேதுமாதவன் இயக்கிய நம்மவர் படத்தில் நாகேஷின் மகளாக நிர்மலா என்ற கதாபாத்திரம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்த போதிலும் நடனம் மீது இருந்த ஆர்வம் காரணமாக பிரபல இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் 1995ம் ஆண்டில் கார்த்திக், ஸ்ரீநிதி நடித்த நந்தவனத் தேரு படம் மூலம் நடன இயக்குநராக பிருந்தா சினிமாவில் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என ஆயிரத்திற்கும் அதிகமான படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். நடன இயக்குனர் பிருந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் ஆரம்ப காலத்தில் நடிகை குஷ்பு உடன் எடுத்த புகைப்படத்தை தற்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

அவை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. அப்போது உள்ள குஷ்பு, பிருந்தாவிற்கு தற்போது நிறைய வித்தியாசம் இருப்பதாக அவரது ரசிகர்கள் பாராட்டியும் வாழ்த்தியும் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

நடிகை சினேகாவின் வாழ்க்கையை சீரழித்த பிரபல டான்ஸ் மாஸ்டர்..!!

கே.ஆர். விஜயாவுக்கு பிறகு புன்னகை இளவரசி பட்டத்திற்கு மிக பொருத்தமானவர் நடிகை சினேகா அவர் சிரித்தால் அவ்வளவு அழகாக இருக்கும் நாள் முழுக்க பார்த்து கொண்டே இருக்கலாம்.

இவர் சினிமாவில் நுழைய பிரபல டான்ஸ் மாஸ்டர்தான் காரணம். ஏனென்றால் சினேகாவின் சொந்த அண்ணனைத்தான் அந்த டான்ஸ் மாஸ்டர் திருமணம் செய்திருந்தார். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் டான்ஸ் மாஸ்டரும், சினேகாவின் அண்ணனும் பிரிந்து விட்டனர்.

அந்த நேரத்தில் சினேகா முன்னணி இடத்தை பிடித்து இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த டான்ஸ் மாஸ்டர் சினிமா வாய்ப்புகளை தட்டி பறிக்க ஆரம்பித்தார்.

இதனால் நடிகை சினேகா ஒரு வருட காலம் சினிமா வாய்ப்பு இன்றி வீட்டிலேயே முடங்கி இருந்தார். பின்னர் கமலுடன் ஜோடி சேர்ந்த உடன் கமல் தலையீடு காரணமாக வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. கமலை எதிர்த்து டான்ஸ் மாஸ்டரால் எதுவும் செய்ய முடியவில்லை.

தற்போது நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு சந்தோஷ குடும்பம் நடத்தி வருகிறார்

 

Post Comment