போதைக்காக பெத்த மகளை தந்தையே … : கொடூரம்!!!

By: jana87

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தந்தை ஒருவர் பாலியல் தொழிலுக்காக தனது மகளை விற்ற கதை சினிமாவையே மிஞ்சும் விதமாக உள்ளது. கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த புத்துராஜ் என்பவர் சலவைத்தொழிலாளி. 24 மணிநேரமும் போதையில் இருக்கும் இவர், சுதாராணி என்பவருக்கு வாடகைக்கு வீடு பார்த்து கொடுத்துள்ளார்.

இதனால், சுதாராணியிடம் அடிக்கடி பணம் கேட்டுள்ளார், சுதாராணியும் இவர் கேட்கும்போதெல்லாம் பணம் கொடுத்துள்ளார். இந்நிலையில், ஒருநாள் பணம் கேட்ட புத்துராஜ்ஜிடம் என்னிடம் பணம் இல்லை, உனக்கு பணம் வேண்டுமானால் உனது மகளை பாலியல் தொழிலுக்கு என்னிடம் கொடு நான் பெரிய தொகையாக தருகிறேன் என கூறியுள்ளார்.

தனது மகளுக்கு ரூ.10,000 விலை பேசியுள்ளார், இதில் ரூ.3,000 மட்டும் கொடுத்த சுதாராணி , தனது வாடிக்கையாளர்களான பவன் மற்றும் ஜவஹர் ஆகியோரிடம் சிறுமியை விற்பதற்கு சென்றுள்ளார்.

காரில் வந்த வாடிக்கையாளர்கள், சுதா மற்றும் சிறுமியை காரில் ஏற்றுக்கொண்டு பயணித்துள்ளனர். காரில் சென்றுகொண்டிருந்தபோது அனைவரும் மது அருந்தியுள்ளனர், மேலும் சிறுமிக்கும் மது கொடுக்கப்பட்டது.

இதற்கிடையில் பணம் தொடர்பாக சுதாராணிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் தகராறு எற்பட்டுள்ளது, இதில் வாடிக்கையார்கள் இவர்கள் இருவரையும் நடுரோட்டில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். நடுரோட்டில் தவித்த இவர்கள், லொறியை வழிமறித்து நாங்கள் இருவரும் அம்மா மகள் எங்களுக்கு யாரும் இல்லை என கூறி உதவி கேட்டுள்ளனர்.

பரிதாப்பட்ட லொறி ஓட்டுநர் இவர்களை லொறியில் ஏற்றிக்கொண்டு தனது சொந்த ஊருக்கு அழைத்து சென்று தங்கவைத்துள்ளார். இதற்கிடையில் மீதித்தொகையை கேட்டு புத்துராஜ், சுதாராணிக்கு போன் செய்துள்ளார், ஆனால் சுதாராணி இதற்கு செவிசாய்க்கவில்லை. இதனால் தனது மகளை காணவில்லை என பொலிசில் புகார் அளித்துள்ளார் புத்துராஜ்.

பொலிசார் நடத்திய விசாரணையில் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டு, மேற்கூறிய தகவல்கள் அம்பலமானது. தற்போது சுதாராணி மற்றும் புத்துராஜ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், சிறுமி தொண்டு நிறுவனம் ஒன்றின் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to Top