செய்திகள்

தடைகளை தகர்த்து “வசூல் வேட்டை” நடத்தும் “தல” அஜித்தின் விவேகம்

பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே வெளியான திரைப்படம் ‘விவேகம்’, ‘தல’ அஜித் மற்றும் இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா கூட்டணியில் வெளியான ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததாலும், இக்கூட்டணியில் மூன்றாவதாக விவேகம் படம் அறிவிப்பு வெளியானத்திலிருந்து ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தாலும் படம் வெளியீடு மிக பிரம்மாண்டமாக இதுவரை அஜித் படத்திற்கு கிடைக்காத மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்தது.

விவேகம் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் ‘தடைகளை உடைத்து சரித்திரம் படைத்து’ வருகிறது என்று கூறலாம் சுமார் 90 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது இப்படத்தின் தயாரிப்பு செலவு, உலகம் முழுக்க மிக பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டு ரூ. 120 கோடிக்கு மேல் விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன,

இதனை தொடர்ந்து இப்படத்தின் வசூல் இன்று வரை சுமார் 150 கோடி ரூபாயை எட்டியுள்ளதாகவும் இது ஆரோக்கியமான வசூல் என்றும் இப்படியே ஒரு வாரம் ஓடினால் விநியோகிஸ்தர்களுக்கு மிக பெரிய லாபத்தை ஈட்டி தரும் என்கிறது ஒரு கருத்து கணிப்பு.

இந்தப் படம் மலேசியாவில் 700 க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியிடப்பட்டு இதுவரை ரூ 8 கோடி வசூல் செய்துள்ளதாகவும், அமெரிக்காவில் மட்டும் ரூ 3 கோடி இதுவரை வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி படங்கள் கூட இப்படி ஒரு சாதனை செய்யவில்லை- விவேகம் செய்த மாஸ் சாதனை

அஜித்தின் விவேகம் படம் வருவதற்கு முன்னரே சொன்னது போல் படம் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டி வருகிறது. சென்னை மற்றும் தமிழகம் தாண்டி வெளிநாடுகளில் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக பல திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் ரூ. 106 கோடி வசூலித்துள்ளது.

இதுவரை ரஜினி படமோ, ஷங்கர் படமோ 4 நாளில் 100 கோடி வசூலித்ததே இல்லை, அஜித்தின் விவேகம் 4 நாட்களில் 100 கோடி வசூலித்துள்ளது சாதனை செய்துள்ளது.

India – 69.50 Cr

Overseas – 36.50 Cr

Total – 106 Cr…

Post Comment