இலங்கை

இலங்­கை மக்களே அவதானம்! செங்­குத்­தாக சூரியன்

எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை இலங்­கையில் உச்ச வெப்­ப­நி­லை இருக்கும் சாத்­தியம் காணப்­ப­டு­கின்­றது. இதனால் வடக்கில் மேலும் வெப்­ப­நிலை அதி­க­ரிக்கும் நிலை ஏற்­பட்­டுள்­ள­தாக வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள் ­ளது.

வளி மண்­ட­ல­வியல் திணைக்­களம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையிலேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்­ளது, அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது

இலங்­கைக்கு செங்­குத்­தாக சூரியன் அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரையில் பய­ணிக்­க­வுள்­ளது.

இதனால் நேர­டி­யான வெப்­ப­நிலை இலங்­கைக்கு இருக்கும். அத­ன­டிப்­ப­டையில் நேற்றுமுன்தினம் நாவ­லடி, சாலை, பெரிய பரந்தன் ஆகிய இடங்­களில் நண்­பகல் 12.12 மணிக்கு சூரியனின் உச்ச வெப்­ப­நிலை காணப்­பட்­டது.

இதே­வேளை நாட்டின் தென்­மேற்குப் பிர­தே­சங்­களில் தற்­போது நிலவும் மழை­யுடன் கூடிய கால­நிலை சற்று அதி­க­ரிக்கும் வாய்ப்­புள்­ளது. மேல், சப்­ர­க­முவ மற்றும் மத்­திய மாகா­ணங்­க­ளிலும் காலி, மாத்­தறை மாவட்­டங்­க­ளிலும் சில வேளை­களில் மழை பெய்யும்.

இரத்­தி­ன­புரி, கேகாலை, களுத்­துறை, காலி மற்றும் மாத்­தறை ஆகிய மாவட்­டங்­களில் சுமார் 50 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. வடமேல் மாகா­ணத்­திலும் அம்­பாந்­தோட்டை மாவட்­டத்­திலும் பல இடங்­களில் மழை பெய்­யலாம்.

இடை­யி­டையே நாட்டை ஊட­றுத்து குறிப்­பாக வடக்கு, வட­மத்­திய, வடமேல், கிழக்கு மற்றும் மத்­திய மாகா­ணங்­க­ளிலும், மாத்­தறை,அம்­பாந்­தோட்டை மாவட்டங்களிலும் வீசும் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீற்றராக அமைந்திருக்கும் என்றும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Post Comment