இலங்கை

இலங்கையில் மாணவி ஒருவரின் லீலைகள்.. போலீசாரே மிரண்டு போன சம்பவம்

இனந்­தெ­ரி­யாத சிலர் குறுக்குப் பாதை ஒன்­றி­னூ­டாக முச்­சக்­க­ர­வண்டி ஒன்றில் தன்னை கடத்திச் சென்று துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்தி, தன்­னி­ட­மி­ருந்து தங்­கச்­சங்­கிலி உள்­ளிட்ட சில உடை­மை­களை கொள்­ளை­யிட்டுச் சென்­ற­தாக பொய்­யான முறைப்­பா­டொன்றை பதிவு செய்த மத்­து­கம பிர­தே­சத்­தி­லுள்ள பிர­பல பாட­சா­லை­யொன்றின் மாண­வி­யொ­ரு­வரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

Studentபிரத்­தி­யேக இசை வகுப்­பொன்­றுக்கு சென்­று­கொண்­டி­ருந்­த­போது இனந்­தெ­ரி­யா­த­வர்­களால் தான் கடத்­தப்­பட்­ட­தா­கவும், அதன்­போது தன்­னி­ட­மி­ருந்த கைத்­தொ­லை­பேசி, தங்கச் சங்­கிலி மற்றும் வயலின் ஆகி­யன கொள்­ளை­யி­டப்­பட்டு, தான் பல்­வேறு இடங்­க­ளுக்கு அழைத்துச் செல்­லப்­பட்டு துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும் தொடங்­கொட பொலிஸ் நிலை­யத்தில் மாண­வி­யொ­ரு­வரால் முறைப்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.இம்­ மா­ணவி கடத்­தப்­பட்­ட­தாகக் கூறப்­படும் தினத்­தி­லி­ருந்து மூன்று நாட்­களின் பின்­னரே முறைப்­பாடு மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

மாண­வியின் வாக்­கு­மூ­லத்­துக்­க­மைய அவர் கடத்திச் செல்­லப்­பட்­ட­தாக கூறப்­பட்ட குறுக்கு வீதி­யி­லுள்ள அனைத்து கண்­கா­ணிப்பு கெம­ராக்­களையும் சோத­னை­யிட்­ட­போது அவர் கூறி­யதை போன்று எந்­த­வொரு காட்­சி­களும் அவற்றில் பதி­வா­கி­யி­ருக்­கா­ததை பொலிஸார் கண்­ட­றிந்­துள்­ளனர்.

இத­னை­ய­டுத்து பொலி­ஸா­ருக்கு சந்­தேகம் வலுத்­த­தனால் மாண­வியின் நெருக்­க­மான நண்பர் வட்­டா­ரத்தை சேர்ந்த சில­ரிடம் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டி­ருந்­தனர்.அவ் ­வி­சா­ர­ணை­களின் மூலம், அவர் கடத்­தப்­பட்­ட­தாக கூறப்­பட்ட தினத்தில் எந்­த­வொரு பிரத்­தி­யேக வகுப்­பு­களும் நடை­பெ­ற­வில்லை எனவும், அன்­றைய தினம் மாணவி அவ­ரது காத­ல­னுடன் கடற்­கரை உள்­ளிட்ட பல இடங்­க­ளுக்கு சென்று உல்­லா­ச­மாக இருந்­துள்­ள­தாகவும் தெரி­ய­வந்­துள்­ளது.

இதே­வேளை, கொள்­ளை­யி­டப்­பட்­ட­தாக கூறப்­பட்ட, மாண­வியின் கைத்­தொ­லை­பேசி அவ­ரது காத­லனின் உற­வி­ன­ரொ­ரு­வ­ரி­ட­மி­ருந்து மீட்­கப்­பட்ட அதே­வேளை, நண்­பி­யொ­ரு­வரின் வீட்­டி­லி­ருந்து அவ­ரது வய­லி­னையும், மாண­வியின் வீட்டு அலு­மா­ரியில் ஆடை­க­ளுக்கு மத்­தியில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் தங்­கச்­சங்­கி­லி­யையும் பொலிஸார் மீட்­டுள்­ளனர்.அதன்­பின்னர், முறைப்­பாட்­டா­ள­ரான மாண­வி­யிடம் விசா­ர­ணை­களை மேற்கொண்டபோது, தான் காலனுடன் சென்ற பயணத்தை வீட்டாருக்கு மறைப்பதற்காகவே இவ்வாறு கடத்தல் நாடகமாடியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், பொலிஸாரின் நேரத்தை வீணடித்து, அவர்களை திசைதிருப்பி, போலி முறைப்பாடு செய்த காரணத்துக்காக முறைப்பாட்டாளரான மாணவியை தொடங்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Post Comment