அதில் முழு இன்பம் காண 72% பெண்களுக்கு இது தேவைப் படுகிறதாம்!

By: jana87

சமீபத்தில் பெண்கள் மத்தியில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. தாம்பத்திய வாழ்க்கையில் அவர்கள் திருப்தி அடைய எவை காரணமாக இருக்கிறது? எப்படிப்பட்ட தாம்பத்திய வாழ்க்கை மற்றும் உடலுறவு முறையை அவர்கள் விரும்புகிறார்கள், வெறுக்கிறார்கள் என அவர்களிடம் கேட்டறியப்பட்டிருந்தது.

இது ஒரு ஆன்லைன் சர்வேவாக நடத்தப்பட்டது. இதில் பதின் வயது முதல் மூதாட்டி வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வில் ஆய்வாளர்கள் வியக்கும்படி பல பெண்கள் உடல் ஊடுருவுதல் மூலமாக தாங்கள் இன்பம் அடைவதில்லை என கருத்து பதிவு செய்திருந்தனர்.முழு இன்பம் காண 72% பெண்களுக்கு வேறு ஒரு விஷயம் தான் காரணமாக இருக்கிறது என்றும் அந்த ஆய்வில் கருத்து பதிவு செய்திருந்தனர்…

ஆய்வு!
உடலுறவில் ஊடுருவுதல் ஒரு பெண்ணை உச்சம் காண வைக்கும் என நீங்கள் எண்ணினால், அது முற்றிலும் தவறு என நிரூபித்துள்ளது சமீபத்திய ஆய்வு ஒன்று.
செக்ஸ் மற்றும் திருமண ஜார்னல் ஆய்வு பத்திரிக்கையில் வெளியான அறிக்கை ஒன்றில், 72% பெண்கள் கிளிடோரிஸ் எனப்படும் பெண்குறி மூலப்பகுதி தீண்டல் மூலமாக தான் ஆர்கஸம் எனப்படும் உச்ச நிலை அடைவதாக கூறியுள்ளனர்.

1000+ பெண்கள்!
இந்த ஆய்வில் 18 – 94 வயதுக்குட்பட்ட 1,055 பெண்கள் பங்கெடுத்துக் கொண்டனர். இவர்கள் தங்கள் செக்ஸ் வாழ்க்கை பற்றி கேட்கப்பட்ட ஆன்லைன் கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தனர். அதன் மூலமாகவே இந்த ஆய்வறிக்கை தயார் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.36.6%
இந்த ஆன்லைன் ஆய்வு ரிசல்ட்டில் 36.6% பெண்கள் ஊடுருவி உடலுறவில் கலவுதல் மூலமாக அடையும் இன்பத்தை காட்டிலும், பெண்குறி மூலம் தீண்டுதல் மூலமாக அடையும் இன்பமே அதிகம் என கூறியுள்ளனர். 18.4% பெண்கள் ஊடுருவுதல் மூலம் அடையும் இன்பமே உச்சம் காண போதுமானது என கருத்து தெரிவித்துள்ளனர்.

பெண்கள் கருத்து!
மேலும், எவ்வகையிலான பெண்குறி தீண்டுதல் விரும்புகிறார்கள் என்ற கேள்விகளும் கேட்கப்படிருந்தன. அதில், கிளிடோரிஸ் சர்க்ளிங் மோஷன், ஹை அன்ட் லோ இன்டன்சிட்டி மோஷன், ரிதமிக் மோஷன் போன்றவை அதிகம் விரும்புவதாக கருத்து பதிவு செய்துள்ளனர்.ஃபோர்ப்ளே!
கிளிடோரிஸ் தூண்டுதல் போக, அதிக உச்சம் காண ஃபோர்ப்ளேவில் ஈடுபடுதல் அவசியம் எனவும், ஃபோர்ப்ளே தான் உணர்வு ரீதியாக துணையுடன் தாம்பத்தியத்தில் இணைய உதவுகிறது எனவும் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to Top