காதலுக்கு பயன்படுத்தப்படும் இதய வடிவம் எப்படி உருவானது என்று தெரியுமா!

By: jana87

காதல் என்று சொன்னாலே எதை நினைக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக நம் நினைவில் வருவது ஹார்ட் வடிவம் தான். எழுதும் போது பேசும் போது என பல நேரங்களில் அந்த வடிவத்தை நாம் பயன்படுத்தியிருப்போம்.ஆனால் இந்த காதல் வடிவத்தை யார் உருவாக்கினார்கள் தெரியுமா? அந்த வடிவத்திற்கு என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். காதலுக்கான அந்த இதய வடிவம் வந்ததற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. அதனைப் பற்றிய ஒரு சுவாரஸ்ய தொகுப்பு

துவக்கம் :
இந்த இதய வடிவத்தை 13 ஆம் நூற்றாண்டில் இருந்தே பயன்படுத்தியிருக்கிறார்கள். 1250 ஆம் ஆண்டு வெளியான பிரெஞ்ச் புத்தகத்தில் இந்த வடிவத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் இப்போது நாம் பயன்படுத்திய இதயத்திற்கு சற்றே வித்யாசமாக இருந்திருக்கிறது.
15 ஆம் நூற்றாண்டில் மேம்படுத்தப்பட்டு இப்போது நாம் பயன்படுத்தும் வடிவம் கொண்டுவரப்பட்டது.கதை 1 :
பெண்களின் பின் புற வடிவமைப்பை குறிப்பதே இச்சின்னம் இடை சிறுத்து பெண்களின் பின் புற எலும்புகள் அகலமாக இருக்கும் போது, காதல் சின்னத்தை தலை கீழாக வைத்த அமைப்பில் இருக்கும். பெண்களின் பின்னழகு ஆண்களில் மனதில் காதல் அலைகளை உருவாக்கும் என்பதை கருத்தில் கொண்டு இந்த வடிவம் உருவாக்கப்பட்டிருக்கலாம்.

கதை 2 :
Cupid எனும் ரோமானியர்களின் காதல் கடவுளின் கைகளில் இருக்கும் வில்லை குறிக்கும் அமைப்பாக இது இருக்கும் என ஒரு கருத்துள்ளது.

கதை 3 :
முத்தத்தின் போது வாய் உதடுகளின் பக்க வாட்டிலான அமைப்பை குறிப்பதாக கருதப்படுகிறது.

கதை 4 :
இரு அன்னப்பறவைகள் ஒன்றை ஒன்று முட்டிக்கொள்ளும் போது உருவாகும் அமைப்பை குறிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.உறுப்புகள் :
பெண்களின் பிறப்புறுப்பை குறிப்பது, ஆண்களின் விதைப்பை அமைப்பை ஒத்ததாக இருப்பதனால் காதல் சின்னம் விதைப்பையின் அமைப்பை குறிகிறது என்றும் சொல்லப்படுகிறது.

காதல் சின்னம் பெண்களின் அணைக்கப்பட்ட மார்பகங்களை நினைவுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது.

இதயம் :
மனித இதயத்தின் ஒரு பகுதி அதாவது பக்கவாட்டிலிருந்து நாம் பார்க்கும்வடிவத்தை காதல் சின்னமாக கொண்டிருப்பார்கள்.
இதிலிருந்து மேம்படுத்தப்பட்ட சின்னம் தான் இப்போதைய காதல் இதயம் என்று சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to Top