பொது இடத்தில் ரொமான்ஸ் செய்யும் போது இதெல்லாம் கொஞ்சம் கவனிங்க பாஸ்!

By: jana87

எல்லாருக்கும் தங்களை பிறர் அன்பு செய்ய வேண்டும், பாராட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அது தான் மனித இயல்பு. அதனால் தான் எனக்கான நபர் என்று அன்பு செய்ய ஓர் நபரை தேடிக்கொண்டிருக்கிறோம்.

காதலர்களும் அவர்களை சுற்றி இருக்கிறவர்களிடையே நடக்கும் சண்டைகள் பெரும்பாலும் இதற்காகத்தான். ஆம், பொது இடங்களில் பிறர் பார்க்கும் வண்ணம் காதலர்கள் தங்களுக்கிடையே அன்னியோன்னியத்தை வெளிப்படுத்துவது.தனியாக இருக்கும் போது காதலைச் சொல்வது அல்லது அன்பை வெளிப்படுத்துவதை விட பிறர் முன்னால் அன்பை வெளிப்படுத்துவது என்பது ரொம்பவே ஸ்பெஷல். பல நேரங்களில் இது உங்கள் காதலை காப்பாற்றவும் செய்திடும்.

கமிட்மெண்ட் :
பொதுவில் அன்பு செலுத்துபவர்கள் இயல்பாகவே தங்கள் காதலின் மீது மிகவும் உறுதியுடன் இருப்பார்கள். இணையை அதிகமாக புரிந்திருப்பார்கள் யாராவது பார்த்துவிடுவார்களோ? பிறரால் என் காதலுக்கு பிரச்சனை வந்து விடுமோ என்றெல்லாம் பயம் இருக்காது.
தன்னையும் தன் காதலையும் முழுமையாக நம்புவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்திடும்.

பாராட்டு :
பொது இடத்தில் தோல் தட்டி பாராட்டுவது அல்லது தோல் சாய்ந்து உட்காருவது என்பது இணைக்கு உற்சாகத்தையே கொடுக்கும். தன்னை அரவணைக்க ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணம் உங்கள் மீதான காதலை அதிகரிக்கச்செய்திடும்.அபிப்ராயம் :
ஒருவருக்கொருவர் பொது இடங்களில் அன்பு செலுத்துவது என்பது உங்களுக்கிடையே மட்டுமல்ல பார்க்கும் மற்றவர்களுக்கும் உங்கள் மீது மதிப்பு வரும். குழந்தைகள் இருந்தால் பெற்றோரைப் பார்த்து பிறரை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று கற்றுக் கொள்ளும். குழந்தைகளின் முதல் ரோல் மாடல் பெற்றோர்கள் தானே.

சண்டைகள் :
ஏதேனும் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்து செல்லும் போது அறைக்குள்ளேயே உட்கார்ந்து அழுது கொண்டிருக்காமல் வெளியே வாருங்கள் இணையை கைகோர்த்து சின்னதாக ஒரு வாக் போனால் கூட அது மனதளவில் பெரும் மாற்றத்தை தந்திடும்.எல்லை :
என்னைச் சுற்றி என்ன நிகழ்ந்தாலும்… நான் உன்னையே கவனித்துக் கொண்டிருப்பேன் என்பதை செயலில் காட்டுவதற்கு சரியான சந்தர்ப்பம். இது இணையோ வெளியில் செல்லுவது பொது இடங்களில் பிறர் பார்வை படும்படி நீங்கள் இருக்கும் போது கவனமாக இருங்கள். பிறரை உறுத்தாத வண்ணம் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to Top