பல்சுவை

திருமணம் செய்து வைத்தால் பொறுப்பு வரும் என்கிறார்களே! உண்மையா?

லர் அவனுக்கு ஒரு கால்க்கட்டு போட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று பொருப்பு இல்லாமல் திரியும் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துவிடுகின்றனர். திருமணத்திற்கு பிறகு உண்மையில் ஒருவருக்கு பொருப்பு வருமா? இல்லையா?

சிறிய வயதிலேயே அவரது சம்மதமின்றி பொருப்பு வர வேண்டும் என்பதற்காக திருமணம் செய்து வைப்பது எந்தளவுக்கு வெற்றியடையும் என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம்.திருமணம் :
27 வயது மதிப்புடைய வாழ்க்கையில் எந்த ஒரு குறிக்கோளும் இல்லாத, புகையிலைக்கு அடிமையான ஒருவருக்கு பொருப்பு வர வேண்டும் என்பதற்காக ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்துவிடுகின்றனர்.

திருமணம் செய்து வைத்தும் அவனுக்கு பொருப்பு வரவில்லை. அவனது தீய பழக்கங்கள் இன்னும் அதிகமானது. சில மாதங்களுக்கு பிறகு எனக்கு விவாகரத்து வேண்டும் என்று போராடத் தொடங்கிவிட்டான். இந்த அவசர திருமணத்தால் யாருக்கு என்ன பயன்?

எப்போது திருமணம்?


இந்தியாவில் திருமணம் என்பது ஒரு குறிப்பிட்ட வயதிற்குள், கட்டாயம் தேவை என்ற ஒரு எழுதப்படாத சட்டம் உள்ளது. அவ்வாறு அந்த குறிப்பிட்ட வயதிற்குள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் பலர் கேள்வி கேட்பார்கள். பலரது விருப்பத்திற்காக செய்து கொள்வது எப்படி திருமணமாகும்?

சரியான வயது எது?
திருமணம் செய்து கொள்ள சரியான வயது எது என்று சொல்லிவிட முடியாது. திருமணம் செய்து கொள்ள வயது முதிர்ச்சியை விட மன முதிர்ச்சி என்பது தேவைப்படுகிறது. அந்த மன முதிர்வானது ஒருவருக்கு மட்டும் இருந்தால் போதாது. இருவருக்கும் மன முதிர்ச்சி இருக்க வேண்டும். பொருப்பு இல்லாமல் திரிபவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதால் எந்த பயனும் இல்லை.தலைகீழ் சிந்தனை!
பிற நாடுகளில் எல்லாம், மன முதிர்ச்சி ஏற்பட்ட பிறகு தான், திருமணம் செய்ய வேண்டும் என்று உள்ளது. அப்போது தான் இருவராலும் மற்றவர்களின் சூழ்நிலைகளை புரிந்து நடந்துகொள்ள முடியும். ஆனால், நமது சமூதாயத்தில் திருமணம் செய்து வைத்தால் பொருப்பு வந்து விடும் என்ற தலைகீழ் சிந்தனை தான் உள்ளது.

மன அழுத்தம்


ஏற்கனவே பொருப்பு இல்லாமல் அல்லது பல பிரச்சனைகளை உடைய ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தால், பிரச்சனைகள் எப்படி தீரும்? திருமணத்திற்கு பிறகு ஒரு குடும்பத்தலைவனாக ஒரு ஆணுக்கு சுமை அதிகரிக்க தான் செய்யும்.

முதலில் உள்ள பிரச்சனைகளையே சமாளிக்க முடியாதவனால், எப்படி திருமணத்திற்கு பிறகு மட்டும் ஏராளமான சுமைகளை சுமக்க முடியும்?

புரிதல் வேண்டும்!திருமணத்திற்கு பிறகு அவ்வளவாக தெரியாத ஒரு நபரிடன் தனது அறை, பொருட்கள் என அனைத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அப்போது அவரது உணர்வுகள், அவரது தனிப்பட்ட தேவைகள் என்ன என்பதை அறிந்து கொண்டு செயல்பட வேண்டும். திருமணம் ஒருவரது சின்ன சின்ன குணங்களை காலப்போக்கில் மாற்றலாம். ஆனால் அதுவரை திருமண வாழ்க்கையில் இணைந்து வாழ, மன முதிர்ச்சியும், பொருமையும் கட்டாயம் ஒருவருக்கு தேவைப்படுகிறது.

Post Comment