இந்தியா

ஜெயலலிதாவை கொன்றது யார்? தமிழச்சியின் பல திடுக்கிடும் தகவல்…!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்தே தமிழச்சி என்பவர் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வந்தார்.

அவர் தற்போது தனது முகநூலில் வெளியிட்டிருக்கும் தகவல் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.அவர் தெரிவித்துள்ள தகவல் பின்வருமாறு:

அக்டோபர் 1 முதல் சசிகலா, ஜெயலலிதாவை பார்க்கவில்லை” என்று கூறுகிறார் தினகரன் “ஜெயலலிதா, இட்லி சாப்பிடவில்லை. பொய் சொன்னதற்கு மன்னித்து விடுங்கள். என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்கூறுகிறார்.

மேற்குறிப்பிட்ட இரு செய்திகளும் ஒரே நாளில் பத்திரிகைகளில் வந்தவை. “ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எங்கள் யாரையும் சசிகலா குடும்பத்தினர் பார்க்க அனுமதிக்கவில்லை.

ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக நாங்கள் கூட்டாக அப்போது சொல்லியது பொய்” என்கிறார் திண்டுக்கல் சீனிவாசன். தமிழ் மக்கள் ஒட்டு மொத்தமாக சசிகலா குடும்பத்தினரை புறக்கணிக்க வேண்டும்.

ஜெயலலிதா படுகொலைக்கு முழு பொறுப்பும் சசிகலா குடும்பத்தினர் மீதே விழ வேண்டும் என்பதற்காக ஏவப்பட்ட ஒரு அம்பு திண்டுக்கல் சீனிவாசன். இந்த உறும்பலுக்கு தினகரன் எதிர் பாய்ச்சல் மோடிக்கும் கொஞ்சம் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும்.

“அக்டோபர் 1 இல் இருந்து சசிகலா ஜெயலலிதாவை சந்திக்கவே இல்லை” என்றால் இந்திய அரசியல் வட்டாரத்தையே ஒரு புரட்டு புரட்டத்தானே செய்யும்? இதை ஏன் ஜெயலலிதா இறந்து 1 வருடத்திற்கு பிறகு சொல்கிறார் தினகரன்?

மோடி கும்பலால் முடக்கி வைக்கப்பட்டிருந்த அதிமுக வின் இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் / இபிஎஸ் அணிக்கு கிடைத்து விட்டதே.

இதற்கு மேல் மோடியின் கருணை நமக்கில்லை என்பதோடு, அரசியலையும் தலை முழுக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதால், தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக்கூடாது என்கிற பழிக்குபழி தான் தினகரனின் அரசியல். இது மக்களுக்கான அரசியல் இல்லை.

2016 செப்டம்பர் 29- இல், ஜெயலலிதா மரணம் அடைந்த செய்தியை நான் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்து, இந்த தகவலை “நாளை செப்டம்பர் 30 இல் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போகிறார்கள்” என்று கூறியதற்காக 77 அவதூறு வழக்குகள் போடப்பட்டன. அவதூறு வழக்கு போடப்பட்ட தேதி செப்டம்பர் 30, 2016.

நான் கூறிய தகவல்கள் முற்றிலும் பொய். அவதூறு என்று தமிழக அரசு மக்களிடம் சமாளித்தது. ஜெயலலிதாவின் பிணத்தை என்ன செய்தது தமிழக / இந்திய அரசு? பிணத்திற்கு வைத்தியம் பார்க்கும் வேளையை டிசம்பர் 5 வரை மாநில மத்திய அரசு செய்ததன் நோக்கம் என்ன?

அப்போது தமிழக அரசு ஓபிஎஸ் கட்டுப்பாட்டில் இயங்கிக் கொண்டிருந்தது. அப்படியானால் ஓபிஎஸ் ஜெயலலிதாவின் மரணச் செய்தியை அறிவிப்பதற்கு பதிலாக ஜெயலலிதா உயிரோடு இருக்கிறார் என்று சொல்ல வைத்தது யார்?

ஜெயலலிதா அப்போலோவிற்குள் கொண்டு செல்லப்பட்ட நாளில் இருந்து மரணச் செய்தியை அறிவிக்கும் வரை மத்திய அரசு அப்போலோவை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்ததே தவிர, சசிகலா குடும்பம் இல்லை.

செப்டம்பர் 22 இரவு போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா தாக்கப்பட்ட போது தமிழக உளவுதுறை அதிகாரிகளில் சிலரும், இந்திய இராணுவத்தைச் சேர்ந்த சில கமாண்டோக்களும் இருந்துள்ளனர்.

அதேப் போல் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனைக்குள் அவசர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்த போது அப்போலோவின் இரண்டாவது தளத்தில் இருந்த 27 கண்காணிப்பு கேமராக்களை அகற்றியவர்கள் இராணுவத்தை சேர்ந்த கமாண்டோக்கள்.

அதிமுகவின் மூவர் அணிகளின் முக்கிய நபர்களுக்கும் ஜெயலலிதாவின் படுகொலைக்கு காரணமானவர்கள் யார் என்று தெரியும். இருந்தும் சசிகலா குடும்பத்தினரை மட்டும் குற்றவாளியாக்க முயற்சிக்கிறார்கள்.

உண்மையான குற்றவாளிகளான மோடி கும்பல்களை குறித்து இந்த மூன்று அணியிரும் பேச ஆரம்பித்தார்களானால், ஒன்று மோடி தூக்கில் தொங்குவார். அல்லது வழக்கம் போல் உண்மை தெரிந்த நபர்களை மோடி அரசு படுகொலை செய்து கொண்டிருக்கும்.

இந்த அயோக்கியனின் குணாம்சத்தை தெரிந்து வைத்திருந்தும் புலி வாலை பிடித்துக் கொண்டிருக்கும் ஓபிஎஸ், இபிஎஸ்க்கு இருப்பது அசட்டு துணிச்சல் இல்லை.

“அரசியலில் எவனும் யோக்கியன் இல்லை” என்னும் பிழைப்புவாதிகளின் வேதாந்தத்தை கற்ற பிழைப்புவாதிகள். அயோக்கியனுடன் கூட்டணி வைத்து ஊழல் செய்வதே அரசியல் பணி என்று கிடைத்ததை தின்பதற்கு அலைந்து திரியும் தெரு நாய்கள்.

இப்போதைக்கு நாம் இங்கே கவனிக்க வேண்டிய தகவல். செப்டம்பர் 29 இல் எனது பதிவு. செப்டம்பர் 30 இல் அவதூறு வழக்குகள். அக்டோபர் 1 இல் இருந்து சசிகலா ஜெயலலிதாவை சந்திக்க தடை.

இதை செய்தவர்கள் யார்? எதற்காக ஜெயலலிதா பிணத்தை அக்டோபர், நவம்பர் என இரண்டு மாதங்களாக வைத்திருந்தார்கள்? எதற்காக ஜெயலலிதாவை கொன்று மரணச் செய்தியை அறிவிக்க இருந்ததை மறைத்தார்கள்?

என்று பரபரப்பு தகவலை வெளியிட்டு இருக்கிறார். இன்னும் பல தகவல்களை வெளியிட இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

Post Comment