செய்திகள்

ஆரவ் குடும்பத்தினரை சந்தித்த ஓவியா.. திருமணம் குறித்து பேசப்பட்டதா?

நேற்று நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி விழாவில் நடிகை ஓவியா உள்ளே நுழைந்த போது அவருக்கு அரங்கமே அதிரும் அளவுக்கு கைதட்டல் கிடைத்தது.

பின்னர் பேசிய ஓவியா ‘என்னை யாருக்குமே பிடிக்காதுனு நினைச்சேன்’ என கூறியது அவரது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

“என்னை யாருக்குமே பிடிக்காதுனு நினைச்சேன். ஆனா, எல்லாருக்குமே என்னைப் பிடிச்சுருக்கு. சின்ன வயசில இருந்தே இந்தச் சமூகத்துக்கும், எனக்கும் ஏதோ ஒன்னு இடிச்சுட்டே இருக்கும்.

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் என் பிளஸ் என்ன, மைனஸ் என்னனு தெரிஞ்சது. அதற்கு நன்றி” என கூறினார் ஓவியா.

நிகழ்ச்சிக்கு பின்னர் நடந்த பார்ட்டியில் ஓவியா ஆரவ்வின் அண்ணன் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு குறித்து இரு தரப்பில் இருந்தும் எந்த விதமான கருத்தும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

Post Comment