இந்தியா

ஜெயலலிதாவுக்கு சசிகலா செய்த சதி இதுதான் : போட்டுஉடைத்த பொன்னையன்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஏமாற்றி சசிகலா அதிகாரத்தினைக் கைப்பற்றினார் என அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

தமிழக ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து வெளியிடும் போது,

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரது உடல் நிலை குறித்து கட்சியினால் சொல்லப்பட்ட தகவலையே அப்போது நான் கூறினேன்.

பொன்னையன்

ஆராக்கியத்துடன் இருந்த அம்மா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன் என்பது தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்த நான் முயற்சி செய்தபோதும், அம்மாவை பார்க்க சசிகலா குடும்பத்தினர் என்னை அனுமதிக்கவில்லை.

அப்பலோவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அம்மாவிற்கு ஆபத்து ஏற்பட்டதா? அல்லது போயர்ஸ்கார்டனிலேயே ஆபத்து ஏற்படுத்தப்பட்டதா? அதனை மூடி மறைப்பதற்காகவே ஜெயலலிதாவை பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லையா?

போன்ற பல கேள்விகள் அப்போது எழுந்த போதும் அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. தற்போது இது தொடர்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

எனினும் பல்வேறுபட்ட மர்மங்களுக்கு சசிகலா தரப்பும், அப்பலோவுமே பதில் கூறியாக வேண்டும். எவ்வாறாயினும் அம்மாவிற்கு எதிரான பல சதித்திட்டங்களை சசிகலாவும், அவரது குடும்பத்தாருமே மேற்கொண்டனர் என பொன்னையன் மேலும் தெரிவித்துள்ளார்.

Post Comment