வினோதம்

இறுதி சடங்கில் பெண்களை அறைகுறையாக ஆடவைக்கும் சீனக் கலாச்சாரம்

ஆரோக்கியத்தில் இருந்து கலாச்சாரம் வரை அனைத்திலும் என்னென்ன கன்றாவி எல்லாம் செய்ய முடியுமோ, அதை எல்லாம் செய்து வருகிறார்கள் சீன மக்கள்.

குடும்பத்தில் ஒருவரின் இறப்பு ஈடு செய்ய முடியாத துயரத்தை தரக்கூடியது. கண்ணீர் சிந்தும் இடத்தில் கூட அவர்கள் கவர்ச்சியை அள்ளி தெளிக்கும் வகையில் இறுதி ஊர்வல சடங்கின் போது பெண்களை வைத்து நடனம் ஆடவைக்கும் சடங்கு பல வருடங்களாக சீனாவில் செய்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் பாட துவங்கும் பெண்கள், அப்படியே மெல்ல ஆடைகளை அவிழ்த்து, கடைசியில் இறுதி சடங்கு, இறுதி ஊர்வலம் நடக்கும் இடத்தில் நிர்வாணமாக ஆட துவங்கிவிடுகிறார்கள்.

கூட்டம் சேர்க்க!

இவை ஊர்வலத்திற்கு பெரியளவில் கூட்டம் சேர்க்க மட்டுமே என கூறப்படுகிறது. இப்படி பெண்களை ஆடைகளை அவிழ்த்து ஆட வைப்பதால் மறு ஜென்மத்தில் அவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.

இறுதி ஊர்வலத்தில் இறந்த நபரின் ஆன்மாவை மகிழ்ச்சியடைய செய்யவே நாங்கள் இவ்வாறான சடங்குகள் செய்கிறோம் என்கின்றனர்.

இந்த சடங்கு ஆரம்பத்தில் கொள்ளையர்கள் மத்தியில் மட்டும் தான் இருந்தது. இது மெல்ல, மெல்ல பொதுமக்கள் மத்தியிலும் பரவ துவங்கிவிட்டதாம்.

இப்படி ஆடும் பெண்களுக்கு சினிமா மற்றும் வீடியோ பாடல்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கிறதாம்.

அரசியில்வாதிகள்!

லோக்கல் அரசியல்வாதியின் மரணத்தின் போது ஆடைகளை அவிழ்த்து ஆடும் 50 பெண்களை வரவழைத்து இறுதி ஊர்வலத்தை விமர்சையாக கொண்டாடியுள்ளனர்.

சீன அரசு!

இந்த இறுதி ஊர்வல சடங்கு முறை நாட்டிற்கு உலகளவில் கெட்ட பெயரை வாங்கி தருவதால், இதற்கு தடைவித்தித்து வருகிறது சீன அரசு.

Post Comment