செய்திகள்

விட்ட மார்க்கெட்டை பிடிக்க பிற நடிகைகள் செய்யத் தயங்குவதை செய்த சதா

டார்ச்லைட் படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார் சதா.

ஜெயம் படம் மூலம் கோலிவுட் வந்தவர் சதா. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் நடித்து வருகிறார். சதாவுக்கு கோலிவுட்டில் மார்க்கெட் இல்லை.இதையடுத்து அவர் வடிவேலு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டார். அந்த படம் ஊத்திக் கொண்டது.

டார்ச்லைட்
விஜய்யை வைத்து தமிழன் படத்தை எடுத்த அப்துல் மஜீத் பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து டார்ச்லைட் என்ற படத்தை எடுத்துள்ளார்.

புது கெட்டப்
டார்ச்லைட் படத்தில் சதா பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார். கோலிவுட்டை போன்று இல்லாமல் பாலிவுட்டில் பாலியல் தொழிலாளியாக நடிக்க நடிகைகள் போட்டி போடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


அழகு
சதாவுக்கு தமிழகத்தில் இன்னும் தீவிர ரசிகர்கள் உள்ளனர். இந்த படமாவது சதாவுக்கு கை கொடுக்கட்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். பல நடிகைகள் பாலியல் தொழிலாளியாக நடிக்க தயங்கியபோது சதா உடனே சம்மதம் தெரிவித்தாராம்.

கதை
பாலியல் தொழிலாளிகள் சிலரை நேரில் சந்ததித்து பேசி தனது கதைக்கு வலு கொடுத்துள்ளார் மஜீத். கணவரை காப்பாற்ற, குழந்தைகளை படிக்க வைக்க தான் பல பெண்கள் இந்த தொழிலுக்கு மனமில்லாமல் வந்ததாக தெரிவித்தனர் என்கிறார் மஜீத்

Post Comment