பல்சுவை

மாணவியின் மார்பை தொட்ட ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!

மாதா, பிதா குரு, தெய்வம் என அறிவூட்டும் சமூகம் நம்முடையது. உலகின் எல்லா பகுதியிலும் தங்கள் குருவான ஆசிரியர்களை கடவுளுக்கும் மேலாக வைத்து தான் பார்க்கிறார்கள்.

ஆனால், அனைவரும் கடவுளாக நடந்துக் கொள்கிறார்களா? என பரிசோதித்து பார்த்தால், ஒருசிலர் போலி சாமியாராக உலாவி வருகிறார்கள். என்று மருத்துவம், கல்வி போன்றவை வர்த்தக ரீதியான தொழிலாக மாறியதோ, அன்றிலிருந்து மக்களுக்கு சரியான மருத்துவமும், சரியான கல்வியும் கிடைப்பதில்லை.மருத்துவ கல்வி வியாபாரம் ஆனதால் தான் மருத்துவ துறை தரம்கெட்டு போனது. இதோ! இவர்கள் போன்ற சில பயங்கரமான ஆசிரியர்களால் தான் ஒட்டுமொத்த ஆசிரியர் துறைக்கும் இழுக்கு உண்டாகிறது…

மார்பு!

ஓக்லஹோமாவில் 69 வயதான வில்லியம் பாட்டர் என்ற ஆசிரியர் ஒருவர் தனது மாணவியின் மார்பை தொட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய காரணத்திற்காக கைது செய்யப்பட்டார். மேலும், அந்த மாணவியை அவர் செக்ஸிற்காக அழைத்து பலமுறை துன்புறுத்தினார் என்றும் அறியப்படுகிறது. அவருக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

லேப் டான்ஸ்!

சர்ச்சில் ஹை ஸ்கூலை சேர்ந்த ஆசிரியர்கள் மாணவர்கள் முன்னர் நீண்ட நேரம் லேப் டான்ஸ் ஆடி அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதில், ஒருவரை ஒருவர் புட்டத்தில் தட்டிக் கொண்டும் ஆடியுள்ளனர். இது இணையத்தில் வெளியாகவே, நிர்வாகம் அந்த ஆசிரியர்களை பணிநீக்கம் செய்தது.

கழிவறை கழுவ வைத்து…

ப்ளோரிடாவை சேர்ந்த பள்ளி ஆசிரியை தனது வகுப்பில் பயின்று வந்த மாணவனுக்கு தண்டனையாக, சிறுநீர் கழிக்கும் துளைகளை, இடத்தை, வெறும் கைகளால் கழுவ கூறியிருக்கிறார். பிறகு அந்த மாணவன் சிறுநீர் துர்நாற்றத்துடன், கைக்கழுவ பள்ளி அலுவலகத்திற்கு சோப்பு கேட்டு சென்ற போது நடந்த சம்பவம் பற்றி அறிந்து பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியை பணிநீக்கம் செய்தது.

செக்ஸ்!

காத்ரின் முரே என்ற ஆசிரியை 15 வயது மாணவனுடன் செக்ஸ் வைத்துக் கொண்டதால் பணிநீக்கம் செய்யப்பட்டார். இவர் தனது அனுபவம் மற்றும் உணர்வு குறித்து அந்த மாணவனிடம் ஒரு பேப்பரில் எழுதி கொடுத்த தகவல் வேறு மாணவர்கள் கையில் சிக்கவே, ஆசிரியை சிக்கிக் கொண்டார். மேலும், இவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பதையும், அந்த மாணவனின் இளைய சகோதரன் கண்டுள்ளான். பலமுறை பள்ளி, வீடு மற்றும் வெளியிடங்களில் இவர்கள் உடலுறவில் ஈடுபட்டது பிறகு தெரியவந்தது.

இரத்தம் சொட்ட…

லிண்டா மே என்ற ஆசிரியை தனது வகுப்பை சேர்ந்த 12 வயது மாணவனை தண்டிக்க பிரித் ஸ்டிக் கண்டு தொடர்ந்து இரத்தம் சொட்ட, சொட்ட தாக்கியுள்ளார். இதனால் அந்த சிறுவனின் கை முழுக்க இரத்த காயங்கள் ஏற்பட்டது.ரவுடி!

ப்ளோரிடாவை சேர்ந்த வில்லியம் என்ற ஆசிரியர் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவன் தவறு செய்த காரணத்தால், அவனை பிற ஆறு மாணவர்களை அனுப்பி அடிக்க கூறியுள்ளார். இது கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

செக்ஸ்டிங்!

அரிசோனாவை சேர்ந்த ஜேம்ஸ் என்ற ஆசிரியர் தனது வகுப்பை சேர்ந்த 15 வயது மாணவிக்கு செக்ஸ்டிங் செய்திகள் அனுப்பி வந்துள்ளார். பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய காரணத்திற்காக அவரை பணிநீக்கம் செய்தனர். அந்த ஆசிரியரை போலீஸ் கைதும் செய்தனர்.

கர்ப்பம்!

ஜெனிபர் ஃபிட்சர் என்ற ஆசிரியை தனது மாணவனுடன் 20,30 முறை உடலுறவில் ஈடுபட்டு கர்ப்பமடைந்தார். இருவர் மேல் சந்தேகம் எழுந்து போலீஸில் புகார் அளித்த பிறகு தான் இது கண்டறியப்பட்டது. அந்த ஆசிரியை மாணவனின் தாயுடன், நான் உங்கள் மகனை விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.

மெக் டொனால்ட்ஸ் அப்ளிகேஷன்!

தனது வகுப்பில் பரீட்சையில் தோல்வியுற்ற மாணவர்களின் மதிப்பெண் தாள் வழங்கும் போது அத்துடன், மெக் டொனால்ட்ஸ் அப்ளிகேஷனையும் சேர்த்து கொடுத்து அதிர்ச்சி ஏற்படுத்தினார் ஓர் ஆசிரியர். இது, வேதனையில் இருந்து மாணவர்களின் மன வலியை அதிகரிக்கும் வகையில் அமைந்தது. இதற்கு மாணவர்களின் பெற்றோர் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தரையில் உணவு…

நியூ ஜெர்சியை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவன் நீரை தவறுதலாக தரையில் சிந்திவிட்டான். இதனால் கோபமடைந்த வைஸ்-பிரின்சிபால் அந்த மாணவன் மட்டுமின்றி, அவனுடன் வகுப்பை சேர்ந்த 14 மாணவர்களையும் தரையில் உணவிட்டு சாப்பிட வைத்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனால் பெற்றோர் சண்டயிட, நிர்வாகம் அந்த ஆசிரியரை பணிநீக்கம் செய்தது. மற்றும் அந்த குழந்தைகளுக்கு $75,000 இழப்பீடாக அளித்தது.

மூச்சுத்திணறல்!

வகுப்பில் மாணவர் ஒருவர் ஆசிரியருடன் சண்டையிட்டுக் கொண்டே இருந்த காரணத்திற்காக, மாணவரை அந்த ஆசிரியர் கழுத்தை நெரித்து மூச்சித்திணறல் ஏற்படுத்தி வகுப்பை விட்டு வெளியே தள்ளியுள்ளார். இந்த சம்பவம் நடந்த மறுநாளே, அந்த ஆசிரியரை பணிநீக்கம் செய்து அனுப்பினர்.

சரக்கு!

தென் கலிபோர்னியாவில் ஒரு பள்ளியில், ஆசிரியை குடிபோதையில் வந்து வகுப்பெடுத்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டார். இவர் மாணவர் மத்தியிலும் தவறான பண்புகளை திணித்தார் என்றும் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், இவருக்கு குழந்தைகளை அபாயத்திற்கு உள்ளாக்கிய காரணத்திற்காக அபராதமும் விதிக்கப்பட்டது.

பிடித்தமான குழந்தைகள்…

இது போன்ற சம்பவங்கள் நாம் அதிகம் கண்டிருப்போம். தங்களுக்கு பிடித்த மாணவர்களுக்கு மட்டும் கூடுதல் கவனம் செலுத்துவது, மற்ற குழந்தைகளை சரியாக கவனிக்காமல் இருப்பது என சிலர் ஆசிரியர்கள் நடந்துக் கொள்வார்கள். இப்படி தனக்கு பிடித்த குழந்தைகளை மட்டும் அரவணைத்து கொண்டிருந்த வெளிநாட்டு ஆசிரியரை பணிநீக்கம் செய்துள்ளனர்.

ரொமான்ஸ்!

லியோனாரா ரஸ்டாவாவா என்ற ஆசிரியை நிச்சயம் ஓர் குருவாக இருக்க தகுதியற்றவர். இவர் தனது மாணவர்களுடன் செய்த ரொமான்ஸ் நிகழ்வுகளை புத்தகமாக எழுதியுள்ளார். இரண்டு மாணவர்கள் என் மீது மிகவும் ஈர்ப்பாக இருந்தார்கள் என குறிப்பிட்டு எழுதிய இவரை பணிநீக்கம் செய்தனர்.

அவமானம்!

ப்ளோரிடாவை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கோன் வடிவிலான மாஸ்க் ஒன்று கொண்டு, வகுப்பில் தவறு செய்யும் மாணவர்கள் அல்லது மதிப்பெண் குறைவாக பெரும் மாணவர்களுக்கு அதை அவமானத்திற்குரிய மாஸ்க் என கூறி அணிவித்து வந்துள்ளார். இதை பள்ளி நிர்வாகம் அறிந்து, அவரை பணிநீக்கம் செய்தது.

ஃபேஸ்புக் பதிவு

சிகாகோவை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பில் வித்தியாசமான சிகை அலங்காரம் கொண்ட மாணவனை படம் எடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தார். அதை அவரது நண்பர்கள் பெரிதும் கேலிக்குட்படுத்த, இதை அறிந்த அந்த மாணவரின் தாய் பள்ளிக்கு கால் செய்து எச்சரிக்கை செய்தார். பிறகு, இந்த செயலுக்காக அந்த ஆசிரியரை பணிநீக்கம் செய்தனர். இது அந்நாட்டு சட்டத்திற்கு புறம்பானது என அறியப்படுகிறது.

மெண்டல்!

ஜெர்மனில் ஆசிரியர் விடுப்பில் இருந்த போது, மாற்று ஆசிரியராக வந்த ஒருவர், வகுப்பில் மாணவர்கள் அதிக சப்தம் போட்டு விளையாடியதால், தானும் நிறுத்தாமல் கத்தி, கத்தி பாடம் எடுத்துள்ளார். ஒரு எல்லையில் சாக் மற்றும் பேனாவை தூக்கி வீசி கத்தி ஆர்பாட்டம் செய்துள்ளார்.

டேப்!

கொலராடோவை சேர்ந்த ஆசிரியர் ஒருவர், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவன் அதிக குறும்பு செய்ததால், அவன் வாயில் டேப் ஒட்டி அமைதியாக இருக்க செய்துள்ளார். பிறகு, சப்தம் போடும் எல்லா மாணவர்களுக்கும் இதே தண்டனை வழங்கியுள்ளார்.

கஞ்சா உணவு!

பள்ளியில் ஆசிரியர்கள் மத்தியில் நடந்த பார்ட்டி ஒன்றில், ஒரு ஆசிரியர் கஞ்சா கலந்த உணவு சமைத்து எடுத்து வந்துவிட்டார். அதை உண்ட பலரும் நலம் குன்றி போயினர். அனைவரையும் பிறகு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது தான் தெரேசா என்ற ஆசிரியர் கொண்டு வந்த உணவில் கஞ்சா கலப்பு இருந்தது என. அது தான் உடலில் விஷத்தன்மை உண்டாக காரணம் என அறிந்து, அவரை கைது செய்தனர்.

ஏர் ஃபிரஷ்னர்!

எலிமெண்டரி பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவர்களை கறி கலந்த ஏர் ஃபிரஷ்னரை நுகர சொல்லி துன்புறத்தியுள்ளார். இவர் இது போல மாணவர்களை வித்தியாசமான முறையால் கொடுமை செய்தார் என்பதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

Post Comment