இலங்கை

யாழ்ப்பாணத்தில் ‘மீன் மழை’! ஆச்சரியத்தில் மக்கள்

யாழ்ப்பாணம் நல்லூர் வீரமாகாளி அம்மன் ஆலயப் பகுதியில் தற்போது ‘மீன் மழை’ பெய்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் தற்போது அடை மழை பெய்து வருகின்றது. மழையுடன் சில வகை மீன்களும் நிலத்தில் பரவலாக வந்து வீழ்கின்றன.

இந்த சம்பவம் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக நடைபெறுவதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த பெரியவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மீன் மழையைப் பார்வையிடுவதற்கு பெருமளவானோர் கூடியுள்ளதாகவும், இது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.