இந்தியா

மனைவியுடன் நண்பன் செய்த காரியம்… நேரில் பார்த்த கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

தமிழ்நாட்டில் வெங்கட சமுத்திரத்தை சேர்ந்தவர் லாரி டிரைவர் வேலன். இவர் செல்வபெருமாள் நகரில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த சசிகுமார் மனைவி நிர்மலா உடன் கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு இருவரும் வீட்டில் தனியாக இருந்தபோது நிர்மலா கணவர் சசிகுமார் வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் சசிகுமார் வேலனின் தலையில் அம்மி கல்லை போட்டு தாக்கியுள்ளார்.இதில் படுகாயமடைந்தவரை விபத்தில் சிக்கிவிட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இது தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

அப்போது சசிகுமார் குற்றத்தை ஒப்புகொண்டதால் பொலிசார் அவரை கைது செய்தனர். அவர் அளித்த வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது: நானும் வேலனும் நெருங்கிய நண்பர்கள் இருவரும் பைக்குகளை திருடி விற்று வந்தோம்.

அப்போது அடிக்கடி என் வீட்டுக்கு வருவார் இதனால் என் மனைவிக்கும் வேலனுக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டது. இது தெரியவந்ததால் என் மனைவியை கண்டித்தேன் . அப்போது என் மனவியையும் என்னையும் வேலன் தாக்கினார்.

இதனால் ஆத்திரம் அடைந்ததால் அவரை கொன்று நாடகமாடியதாக விசாரணையில் சசிகுமார் தெரிவித்துள்ளார்