இலங்கை

முல்லைத்தீவில் நடந்த பயங்கரம்!! நேரடி வீடியோ வெளியானது.. ! (அதிகம் பகிருங்கள்)

முல்லைத்தீவு இ.போ.ச பேருந்து விபத்து முல்லைத்தீவில் தனியார் பேருந்தை, முல்லைத்தீவு இ.போ.ச பேருந்து முந்த முற்பட்ட போது அந்த தனியார் பேருந்து முந்தவிடாமல் வீதிக்கு குறுக்கே வந்ததனால் இ.போ ச பேருந்து குடைசாய்த்து விபத்துக்கு உள்ளானது…..


இவ் சம்பவத்தில் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.. விபத்தை ஏற்படுத்திய அந்த தனியார் பேருந்து நிறுத்தாமலே செல்வதை காணொளி ஊடக தெளிவாக தெரிகின்றது….

முள்ளிவாய்க்கால் பகுதியில் பயணிகளுடன் பயணித்த இலங்கைப் போக்குவரத்து சபையின் பேருந்து சற்றுமுன்னர் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அதில் ஐவர் காயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தனியார் பேருந்தும், இ.போ.ச. பேருந்தும் ஒன்றையொன்று போட்டி போட்டு வேகமாகப் பயணித்த நிலையில், வேக கட்டுப்பாட்டை இழந்த இ.போ.ச. பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது எனத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்தவர்கள் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.